பக்கம்:தமிழ்க் காதல்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

தமிழ்க் காதல்


உள்ளுறை என்ன? தலைவன் தனக்கென வரைந்த மனைவியையும் மனையையும் உவர்த்தான். இல்லத்தார் எல்லாரும் துங்கும் நடுயாமத்தில் நாணமின்றிப் பரத்தையை விழைந்தான். கிளையேறிக் குதித்து வீட்டு வேலியைக்கடந்தான். நேரே பரத்தையர் சேரிக்குச் சென்றான். அங்குப் பரத்தையின் தோழியரும் தாயும் இருந்தனர். பொருளால் அவர்களை மயக்கிப் புறம்போகச் செய்தான். பாணர்கள் இசை வாசிக்க, இளம் பரத்தையை நுகர்ந்தான். தலைவனது இச்செயல்கள் நிரலாக இயல்பாக நிகழ்ந்தவை. இவன் செயல்களின் ஒவ்வொரு கூறும் புலப்பட வேண்டுமென்று, எருமைக்கு அனைத்து இடங்களையும் செயல்களையும் ஏற்றி நிகழ்த்திக் காட்டினார் புலவர். மலர்விலைஞர் காலையில் வயலிலிருந்து நீலப்பூக்களைப் பறித்துக்கட்டி ஊருக்கு வந்தனர். அக்கட்டோடு ஒரு வண்டும் வந்தது. யானை மதத்தில் மொய்த்துக் கொண்டிருக்கும் ஊர் வண்டுகள் வயல் வண்டுக்கு விருந்தோம்பின. அதனால் அவ்வண்டு பகல் முழுதும் அங்கே தங்கிவிட்டது. இரவில் கணவனோடு கூடி இன்புறும் காதலியர்தம் நறுங் கூந்தலில் அமர்ந்தது. அக்கூந்தலில் செருகியிருக்கும் முல்லை மணத்தை நுகர்ந்தது. அன்று முதல் ஊரிலே தங்கித் தனக்குரிய் பழைய வலை மறந்தொழிந்தது. வீங்குநீர் அவிழ்நீலம் பகர்பவர் வயற்கொண்ட ஞாங்கர் மலர்சூழ்தந் துர்புகுந்த வரிவண்டு, ஒங்குயர் எழில்யானைக் கனைகடாம் கமழ்நாற்றம் ஆங்கவை விருந்தாற்றப் பகலல்கிக், கங்குலான் வீங்கிறை வடுக்கொள வீழுநீர்ப் புணர்ந்தவர் தேங்கமழ் கதுப்பினும் அரும்பவிழ் நறுமுல்லை பாய்ந்துதிப் படர்தீர்ந்து, பண்டுதாம் மரீஇய பூம்பொய்கை மறந்துள்ளாப் புனலணி நல்லூர(கலி )ை தலைவன் தன் வீட்டை அறவே மறந்ததையும், காலை பகல் இரவெல்லாம் பரத்தையர் சேரிக்கண்ணே புணர்ந்தாடித் திரிவதையும், வெளியிட்ட சொற்களால் சொல்வது நாகரிகமன்று என்று கருதி, உள்ளுறைப் பொருளாகப் புனைந்துள்ளார் மருதன் இளநாகனார். தலைவனது செலவு வரவுகளை நினைந்து வண்டிற்கும் செலவு வரவுகளைப் படைத்து மொழிதல் காண்க இஃது அகப்புலவன் தன் உரிமை. இதனால் இயற்கை பற்றிய தமிழ் நெஞ்சம் என்ன? இயற்கை மக்கள் வாழ்வுக்கு ஒரு கருவி, அது காதல் என்னும் அகப்பொருளை உணர்த்த வேண்டும். இயல்பாக உணர்த்தாவிடின், உணர்த்துமாறு அதனை வளைவிக்கவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/186&oldid=1238530" இலிருந்து மீள்விக்கப்பட்டது