பக்கம்:தமிழ்க் காதல்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

173



அகத்திணைக் கரு

சமுதாயவியல், நிலவியல், உளவியல் என்ற மூன்று அடிப்படைகொண்டு அகத்திணைத் தோற்றத்தை இதுகாறும் கண்டோம். அகத்தினையின் உரிப்பொருளான காதற்காமம் தமிழினத்தின் உள்ளத்தோடு ஒன்றிய உணர்ச்சியாகும்; அகப்பொருள் அவ்வுணர்ச்சி தந்த பேறாகும். காதற் குருதியோடும் இளமக்களிடமிருந்து பிற பேற்றை எதிர்பார்க்கலாமா? இனப்பண்புதான் இலக்கியப் பண்பாகும். அகத்திணை போன்ற தனி இலக்கியப் படைப்பு காதற்கண்ணோடு உலகியற் பொருள்களை நோக்கி வாழும் இயல்புடைய இனத்திலிருந்தல்லது பிற நோக்குடைய இனத்தில் தோன்றாது. தமிழினம் காதற் கண்ணுடையது என்பதும், அதனால் அகத்திணை யிலக்கியத்தைப் படைக்க வல்லதாயிற்று என்பதும் தெளிவு. காதல் என்னும் அகத்திணைக் கருவைத் தமிழின நெஞ்சம் ஈனிற்று. அக்கருவை இலக்கிய மகவாகச் செவிலிப் புலவர்கள் எடுத்து வளர்த்து நல்லாளாக ஆக்குதற்கு வேண்டும் ஊட்டு பொருள்களைத் தமிழ்ச் சமுதாயமும் தமிழ் நிலமும் வழங்கின. . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/187&oldid=1238532" இலிருந்து மீள்விக்கப்பட்டது