பக்கம்:தமிழ்க் காதல்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

194

தமிழ்க் காதல்


இடைக்காலத்து முரணான கருத்து மரபாகிய காரணத்தால் ஐந்திணையை 'அகம் எனவும், கைக்கிளை பெருந்திணைகளை 'அகப்புறம்’ எனவும் ஆளும் பிழையான இலக்கண வழக்காறு ஏற்பட்டு விட்டது காண். இடைக்காலத் தமிழ்ச் சமுதாயத்தில் மதங்களும் சாதிகளும் பல கோட்பாடுகளை விதைத்தன; பரப்பின. இவற்றைத் தொல்காப்பியம் சங்கவிலக்கியம் போன்ற தொன்னுரல்களிலும் காணவிழைந்தனர் அக்காலப் புலவர்கள். இவ்வேண்டா வேட்கையால், பண்டை எளிய கருத்துக்கள் அரியவாயின; தெளிந்த கருத்துக்கள் கலங்கின.

VII

ஐந்திணையும் பெருந்திணையும்

பெருந்திணைக்கண் எவ்வகையானும் வலிந்த காமத்துக்கு இடனில்லை என்பதும், உள்ளப்புணர்ச்சி என்னும் அகத்திணைப் பண்பிற்கு ஒத்ததுவே பெருந்திணை என்பதும், தொல்காப்பியரும் சங்கப்புலவர்களும் பெருந்திணையை அன்புக்காமமாகவே வகுத்துப் பாடியுள்ளனர் என்பதும் என் அதிராத் துணிபு. அகத்தினையின் பெரும்பிரிவான ஐந்தினை நூற்றுக்கு மேலான துறைகள் கொண்டது என நாம் அறிவோம். பெருந்திணை மிகச்சில துறைகளே உடையது; விரிவாக்க இயலாதது. “செப்பிய நான்கே' என்பதனால்துறை வரம்பினையும், “பெருந்திணைக் குறிப்பே' என்ப தனால் விரிவுக்கு இடமின்மையையும் ஆசிரியர் தெளிவாக்குவர். பெருந்திணைத்துறை நான்கும் ஐந்திணைக்கு முற்றும் வேறானவையல்ல என்பதும், ஐந்திணையின் சில துறைகளே இந்நான்கின் பிறப்பிடம் என்பதும் யான் கண்ட முடிபுகள். பெருந்திணை நூற்பா‘ஏறிய மடற்றிறம்” என்று தொடங்குவதே ஒரு சான்று. இத்தொடர் "மடல்மா கூறும் இடனுமார் உண்டே’ (1047) எனவரும் ஐந்திணைக் களவடியை நினைவூட்டவில்லையா? தலைவன் தலைவியர் சில் காதல்களை உள்ளத்தளவிலும் சொல்லளவிலும் காத்தோம்பிக்கொள்ளும் போது, அக்காதற் பாங்குகள் ஐந்திணைப்படுகின்றன. அவ்வளவுகளுள் காத்தோம்பமாட்டாது சிலர் காதல் மிகுவர்; மிகுதியால் சில காதற்செயல்களை மேற்கொள்வர். ஆதனால், ஊரறியும் இக்காதல் மிகைகளே பெருந்திணைப் பொருளாவன. ஐந்தினையாவது அளவுக்காதல்; பெருந்தினையாவது மிகுதிக் காதல் பெரும் என்ற அடை அளவினும் மிகுதிப்பாட்டை, மிகையைக் குறிக்கின்றது. பெருமூச்சு, பெருங்காற்று, பெருமழை, பெரும்பேச்சு, பெருங்காஞ்சி, பெருவஞ்சி என்ற தொடர்களை உடன்நோக்குக.


[1]

  1. நம்பி அகப்பொருள்: 241, 244
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/208&oldid=1395810" இலிருந்து மீள்விக்கப்பட்டது