பக்கம்:தமிழ்க் காதல்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

தமிழ்க் காதல்


குடிகளின் நலங்கருதித் தன் மனம் பாராது அரசன் திறை கொடுத்தேனும் அமைதி செய்துகொள்ள வேண்டும் என்பர் அரசியற்புலவர் (குறள் 680). அதுபோல் பெற்றோர்கள் மகள் நலம் நோக்கித் தம் குடிமானம் பாராது, அவள் உள்ளங் கவர்ந்தானுக்கு வரைவுசெய்வர் வரைவு செய்ய வேண்டும். இதுவே அறமாம்.

யார் ஒவ்வாமை?

அகத்தினையாவது உள்ளப்புணர்ச்சி, ஆண் பெண் இருவர் உள்ளமும் காதலுக்கு ஒத்திருத்தல். பெற்றோர் முதலாகப் பிறர் யாருள்ளமும் ஒத்திருக்க வேண்டும் என்பது இல்லை. பிறர் உள்ளமெல்லாம் இவ்விருவர் உள்ளத்திற்கு ணங்கியாதல் வேண்டும்.இதுவே அகநெறி,"அன்புறு கிளவியாள்” (கலி.138)"ஒண் டொடி நோய் நோக்கு” (கலி. 140) என வருதலின், தலைவி அவன்காதலுக்கு இசைந்தாள் என்பது தெளிவு. ‘என் நெஞ்சாறு கொண்டாள்” (கவி. 139) "என் நெஞ்சம் இடியஇடைக் கொள்ளும் சாயல் ஒருத்தி”(கலி.140) எனவருதலின், அவன் காதல் வெளிப்படை. இருவரும் ஒத்த அன்புடைக் காதலர்கள்; இயற்கைப் புணர்ச்சியளவில் இடையூறுபட்ட ஐந்திணைக் காதலர்கள். தலைவன் மடலேறி இடையூற்றைத் தவிர்த்தான். இற் செறிக்கப்பட்ட காதலியைத் தன் பெருமுயற்சியால் இல்லக்கிழத்தி ஆக்கினான்; கற்பியற்படுத்தினான். அப்பெருமுயற்சிக்கு அவன் நாண் விட வேண்டியதாயிற்று. காதற்றொடர்பை மடலேறி ஊருக்கு அறிவிக்க வேண்டியதாயிற்று. அங்ங்னம் செய்து அவள்தன் பெற்றோரை வணக்கவேண்டியதாயிற்று. இவையெல்லாம் மிகுசெயல் அல்லவா? ஆதலின் பெருந்திணையாயிற்று என அறிக. பெருந்திணையாவது இருவர் உள்ளமும் பொருந்தாக் காமம், ஒவ்வாக் காமம் என்று, இதுவரை நாம் கற்று வருகிறோமே, அது பிழை என்பது இப்போது தெளிவு. இப் பெருந்திணைக்கண் பெற்றோர் ஒவ்வாமையைக் காண்கின்றோமேயன்றிக் காதலுக்கு உரியோர் ஒவ்வாமையைக் காணவில்லை. சமுதாயப்படி ஒப்பவேண்டும் பெற்றோர் ஒவ்வாவிடினும் (அது முதன்மையன்று), காதல் மாந்தர்கள் அகம் ஒத்த உள்ளப் புணர்ச்சியராதலின், இப் பெருந்தினை அகத்திணைப் பகுதியாயிற்று. களவை நாணின்றி வெளிப்படுத்திக் கற்பாக்கினமையின், ஐந்திணைப் படாது. பெருந்திணைப்பட்டது.


VIII

2. இளமை தீர்திறம்

மணமானபின், காதலர்க்கு இல்லறப் பொறுப்புப் பலவந்து சேரும். அகலாது அணைந்து ஆரத் தழுவி இன்பச் சுவையை நாளும் பருகிக் கொண்டிருத்தல் என்பது இயலாது. இல்லறம் ஆற்றப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/211&oldid=1395813" இலிருந்து மீள்விக்கப்பட்டது