பக்கம்:தமிழ்க் காதல்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக் குறிக்கோள்

199


பொருள் வேண்டும்; பொருளிட்ட ஆடவன் பிரியவும் மனைவி பிரிந்திருக்கவும் வேண்டும். செல்வத்தின் பொருட்டு இன்பப் புணர்வை இழத்தலும் கூடாது. மக்கள்.வாழ்க்கையில் இளமைப் பருவம் நிகரற்ற ஆற்றல் சான்றது: வனப்பிற்கும் ஊக்கத்திற்கும் ஆக்கத்திற்கும் ஏற்றது. இளமையின்பமே இன்ப வீறுடையது. இன்பமின்றி இளமையைக் கொன்னே கழித்தல் இல்வாழ்வார்க்கு அறமாகாது, அறிவுமாகாது. கூடியவரை கூடிவாழப் பார்த்தல் வேண்டும். இளமைத் தனிவு உடலுக்கும் உளத்துக்கும் நயமில்லை. எண்ணவுயர்ச்சிக்கும் சிறப்பில்லை. நாளும் கழியும் இளமையை, மீண்டு வாராத நற்பருவத்தை உடனிருந்து ஐம்புலவின்பம் துய்த்துக் கழிப்பது இல்லற ஒழுக்கமாகும்.

இளமை சிறந்ததாயினும் அது சிறக்கச் செல்வம்வேண்டும், வேண்டும். வறியவன் இளமைஇல்லற வேரை அரித்துவிடும். பூவாது, பொலியாது. இளைய வறுமை இன்பக் கொல்லி. இஃதோர் வாழ்க்கைச் சிக்கல்.

புனரிற் புணராது பொருளே, பொருள்வயிற்

பிரியிற் புணராது புணர்வே - (நற். 14)

இளமைக் காலத்துத்தான் இன்பம் துய்க்க முடியும். அக்காலத்தேதான் உலைவின்றித் தாழாது உஞற்றிப் பொருளிட்ட முடியும். முதிர்ந்த பருவத்தில் இன்பத்திற்கும் உழைப்பிற்கும் உடல் இடங்கொடாது. இன்பமோ இளமைக்கு உரியது. செல்வமோ இளமையொடு முதுமைக்கும் வேண்டுவது. முதுமை அளவுக்கு வேண்டிய செல்வ வைப்பை முன்னினைந்து இளமையிலேயே ஈட்டித் தொகுக்க வேண்டும். என்செய்வார்கள் இல்லறப்புதியர்கள்!

கார் கூதிர் முதலியன இன்பத்துக்குத் தகுந்த பருவங்கள். அக்காலத்துத் தலைவன்கூடிவாழ்ந்து இன்புறுவான். பிற பருவங்களில் பிரிந்தகன்று பொருள் தேடுவான். கூடுதலும் பிரிதலும், பிரிதலும் கூடுதலுமான் ஒர் அளவுபட்ட வாழ்க்கை நெறியைக் கடைப்பிடிப்பான். ஆண் நீடித்த இளமையுடையவன். முதிர்விலும் அவனுக்குக் காமச் செவ்வி உண்டு. பெண்ணுக்கு இளமைப்பருவம் குறுகியது. அகவை ஐம்பதிற்குள் அவள் காமம்நின்றுவிடும். இஃது உடலியல் ஆதலின் இயல்பாகவே பெண் இளமையைக் கழியாது போற்றிக் காமப்பயன் கொள்ள விரும்புவாள். பொருட்காகக் காமத்தைப் பலியிட எண்ணினாள். காமஇன்பம் கையில் உள்ளது. கால வெல்லைக்கு உட்பட்டது எனவும், பொருளோ சென்று தேடவேண்டுவது என்றும், தேடிக் கொள்ளக் கிடப்பது எனவும் கூறுவாள். “எம்மையும் பொருளாக மதித்தீத்தை" (கலி.13) என்பது ஒரு தலைவியின் அறிவுரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/212&oldid=1395814" இலிருந்து மீள்விக்கப்பட்டது