பக்கம்:தமிழ்க் காதல்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணை குறிக்கோள்

203



இல்வாழ்க்கையில் காதல் நுகர்ச்சிக்கு ஒத்த மதிப்புக் கொட்ாது, இளமையை வேண்டுமளவு நுகராது, பொருள் முதலாயவற்றில் நாட்டங்கொண்டு ஒழுகுவது மிகையாதலின், இளமை தீர்திறம் பெருந்திணையாயிற்று. எனினும் காதலர்களின் உள்ளன்பிற்குக் குறைவில்லை, களங்கமில்லை யாதலின் அகத்தினையாயிற்று என அறிக. - - HX 3. தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் தலைவன் பிரிந்த ஞான்று ஐந்திணைத் தலைவி பிரிவு பொறாது வருந்துவாள். பறவையின் புணர்ச்சியும் விலங்கின் தழுவலும் காரும் மாலையும் பிற இன்பச் சூழ்நிலைகளும் அவளைக்கொல்லும், அவள் அடக்கத்தைக் கிளறும். தலைவன் குறித்த காலவரவை எதிர்நோக்கி வருவான், வருவான் என்ற நம்பிக்கையோடு தன் காமத்தை நானங்கடாவது காத்துக்கொள்வாள். வீட்டுக் குருவி முற்றத்தில் காயும் தானியங்களைத் தின்று குப்பையைக் குடைந்து விளையாடிப் பிள்ளையொடு இறவாரத்தில் தங்கும் இயல்பினது இம்மாலைக் காலம். இதனைக் காணும்போது என் உள்ளம் அலைகின்றது, தனிமைக்கு வருந்துகின்றது. அதனாலென்? என் தலைவன் சென்ற நாட்டிலும் இத்தகைய மாலைப்போது இருக்கும்; அவன் அதனைக் காண்பான்; என்போல் உள்ளம் அசைந்து திரும்புவான்: இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும் புன்கண் மாலையும் புலம்பும் - இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே (குறுந் 46) எனத் தானே சொல்லி அனுமதி பெறுகின்றாள் பிரிவுத் தலைவி. சுற்றுப்புறக் காட்சிகள் விடாது தாக்கினாலும், காமம் சுரந்து நெஞ்சிற் பரவி அலைத்தாலும் தலைவி நாண்விடாள், ஊரறிய உணர்ச்சியைக் காட்டாள். தனக்குத் தானே ஆறுதல் அடைவாள்; அல்லது தோழியால் ஆற்றுவிக்கப்படுவாள். இது ஐந்திணை நெறி. இந்நெறி வழுவிக் காதலனைப் பிரிந்த தலைவி தனைமறந்த துயர்கொண்டு ஊர் அறிய வந்து புலம்பும்போது நாண் நீங்குகின்றது; பெருந்திணை தோன்றுகின்றது. - ஒருவனுக்கு ஒருத்திக்கும் காதல் நிகழ்ந்தது, மணம் நிகழ்ந்தது. புணர்ச்சி நிகழ்ந்தது.அகம் மகிழக்கூடிக் குலவி மனம் நிறைவுபெறா முன்னரே பிரிவு நிகழ்ந்து விட்டது. என்னாவாள் இளம்பெண் - புரிவுண்ட புணர்ச்சியுள் புல்லாரா மாத்திரை அருகுவித்து ஒருவரை அகற்றலின் தெரிவார்கண்ட பயனின்று மன்றம்ம காமம் (கவி. 142)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/216&oldid=1238923" இலிருந்து மீள்விக்கப்பட்டது