பக்கம்:தமிழ்க் காதல்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

தமிழ்க் காதல்


204 தமிழ்க் காதல் என ஆசிரியர் இத்தகைய இளம்பிரிவிற்கு இரங்குகின்றனர். மணந்த அணிமையிற் பிரிவதாயின் காமத்திற்கு என்ன பெருமையுண்டு? என நகுகின்றார்.தலைவி குற்றமிலள், குற்றஞ் செய்யும் நிலையில் வளர்ந்தவளும் இலள்.தோழியரோடு விளையாடுங் காலத்தும் கலகலவென்று பல்தோன்றச் சிரித்தறியாள், பல்லின் நுனியும் வெளிப்படாத வண்ணம் முறுவலை உள்ளடக்கிக் கொண்டு, மனமகிழ்ச்சியைக் கண்ணாலும் முகத்தாலும் காட்டும் மெல்லியள்: நாண மிகுதியுடையவள். இன்று என்னானாள்? தலைவன் அவள் நெஞ்சென்னும் அடுப்பில் காமக் கொழுந்தைப் பிறப்பித்து அகன்றான். அது மூண்டு நீண்டு எரியாகி நற்பண்புகளை அழிக்கலாயிற்று. ஊராருக்கெல்லாம் கேட்கும்படி கத்துகின்றாள்; எல்லாப் பல்லும் காட்டிச் சிரிக்கின்றாள்; உடனே அழுகின்றாள். ஒண்ணுதல் ஆயத்தார் ஒராங்குத் திளைப்பினும் முண்ணுனை தோன்றான்ம முறுவல்கொ டடக்கித்தன் - - . கண்ணினும் முகத்தினும் நகுபவள்; பெண்ணின்றி யாவரும் தன்குரல் கேட்ப நிரைவெண்பல் மீயுயிர் தோன்ற நகாஅ நக்காங்கே பூவுயிர்த் தன்ன புகழ்சால் எழிலுண்கண் : ஆயிதழ் மல்க அழும் (கவி. 142) நல்லந்துவனார் ஐந்திணைப் பெண் பெருந்தினைப் பெண்ணாக மாறும் நிலைகளை மேற்கண்டாங்கு வடித்துக் காட்டுவர். அதனால் நாணமும் காமஅடக்கமும் ஐந்திணைப்பண்பு எனவும், நாணாமையும் அடங்காமையும் பெருந்திணைப் பண்பு எனவும் அறிகின்றோம். இம்மாற்றத்திற்குக் காரணம் நிறையாப் புணர்ச்சி, புணர்ந்தும் ஆராமை எனவும் தெளிகின்றோம். நெடுநேரம் தாகத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கலாம்; அரைகுறையாகத் தண்ணிர் குடிக்க முடியுமா? பல்போது பசி பொறுத்திருக்கலாம்; பாதியுண்டளவில் பசியை அடக்கமுடியுமா? காமப் பசியும் இன்ன தன்மைத்து. - மணமாகிய ஓர் ஐந்திணைத் தலைவியின் ஆராக் காமவுணர்வே பெருந்திணைப் பொருளாகும். மணந்த அணிமையிற் பிரிவது மனைவி உள்ளத்தை வாட்டும். ஆறுவாள் ஆற்றப்படுவாள் என்று நினைத்துக்கொண்டு அறிவுடைக் கணவன் புறப்பட்டான். குழந்தை ஈன்ற மனைவிகூடத் தலைவனது அகற்சிக்கு இசையாள் என்று பல பாடல்கள் விளம்புகின்றன. கார்ப்பருவத்தே தலைமகன் பிரியக் கருதுகின்றான். அவன் மனைவி ஒரு குழந்தை பெற்றவள். அக்குழந்தை தாய்ப்பால் குடித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தலைவனது பிரிவைத் தோழி தடுக்கின்றாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/217&oldid=1238921" இலிருந்து மீள்விக்கப்பட்டது