பக்கம்:தமிழ்க் காதல்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

தமிழ்க் காதல்


திருமகளை ஆசிரியர் உவமித்தல் காண்க. இதனால் இளநங்கையின் வேட்கையும் தூய்மையும் கற்பும் பெறப்படும். நாண் நீங்கினாள், ஊரறிய வெளிப் பட்டாள், காமம் புலம்பினாள் என்பதற்காக, அத் தையலாள் கற்பிழந்தாள் என்று ஆகாது. உள்ளங்கவர்ந்த ஒருவனையே ஊரறியக் கூப்பிடுகின்றாள். ஞாலங்கேட்கக், கதறுகின்றாள்.

இன்னுயிர் அன்னாற்கு எனைத்தொன்றும் தீதின்மை
என்னுயிர் காட்டாதோ மற்று. (கலி. 143)

ஈண்டுநீர் ஞாலத்துள் எங்கேள்வர் இல்லாயின்
மாண்ட மனம்பெற்றார். மாசில் துறக்கத்து
வேண்டிய வேண்டியாங் கெய்துதல் வாயெனின்
யாண்டும் உடையேன் இசை (கவி. 143)

என்தோளை நெகிழ்த்துப் பிரிந்தவன் யாதொரு நோயும் உறவில்லை; உயிரோடிருக்கின்றான்.அதற்குச்சான்று,நான் உயிரோடிருப்பதுவே என உயிரொருமை கூறுவதாலும், ஒருகால் என். கணவன் இறந்திருப்பானாயினும், நல்ல மனமுடையார் எண்ணியதைத் துறக்கத்தில் எய்துவர் என்பது உண்மையாயின், நானும் அவனை அடைவேன் என்று மனத்துய்மை நவிலுதலாலும், காமக் கலக்குண்ட அவள் கற்பிற்கலங்கவில்லை என்பது தெளிவு. கற்பு போய்வரும் பொருளில்லை. நானோ ஒழுக்கத்தை விடாது அரிதிற் போய்வரும் தன்மையுடையது. ஆதலின் காதலன் வரக் கண்டதும் பேதை துயரமெல்லாம் மறந்தனள், போன தானம் திரும்பப் பெற்றாள், வணங்கினாள். அதனோடு பழைய பண்புகளெல்லாம் வந்து சேர்ந்தன.

காதலன் மன்ற அவனை வரக்கண் டாங்கு
ஆழ்துயர மெல்லாம் மறந்தனள் பேதை
நகையொழிந்து தானுமெய் நிற்ப இறைஞ்சித்
தகையாகத் தையலாள் சேர்ந்தாள் நகையாக
நல்லெழில் மார்பன் அகத்து (கலி. 147)

என்று இப்பெண்பாற் பெருந்தினையை ஐந்திணையாக முடித்துக் காட்டுவர் நல்லந்துவனார். “நகையொழிந்து நாணுமெய் நிற்ப இறைஞ்சி" என ஐந்தினைப் பண்புகளை மீண்டும் பொருத்திக் காட்டுவர்; பெண்ணின் பெருமையை நிறுவுவர் நாண்விட்டமை யால், காத்து மிகுதிறத்தால் பெருந்திணையாயிற்று. உள்ளம் ஒத்த இல்லத்தாராதலின், அகத்திணை எனப்பட்டது. மனைவியின் காமநாடியைக் கண்டு ஒழுகல் வேண்டும்; இதனைக் கணவன் உணர்வானாக என்பது இத்துறையின் அறிவுரை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/219&oldid=1400209" இலிருந்து மீள்விக்கப்பட்டது