பக்கம்:தமிழ்க் காதல்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக் குறிக்கோள்

207



X

4. மிக்க காமத்து மிடல்

இத்தொடருக்குக் "காமமிகுதியானே எதிர்ப்பட்டுழி வலிதிற் புணர்ந்த இன்பம்” என்று நச்சினார்க்கினியர் உரைப்பர்.“கரைகடந்த காமத்தால் விரும்பாரை வலிதிற் புணரும் வன்கண்மை” என்று பாரதியார் உரை செய்வர். இதுவரை பிறர் பலரும் எழுதியுள்ள கருத்து இதுபோன்றதே. கட்டாயப்படுத்திப் புணர்தல் என்று கருத்துக்கொள்ளுதற்கு, மிக்க காமத்து மிடல் என்ற தொடர் எப்படி இடங்கொடுக்கின்றது? மிடல் என்ற சொல்லுக்கு இப்பொருள் உண்டு என்று பலர் கருத்லாம். பொதுக் கருத்து. முன்னும் பின்னும் வரும் கருத்துத் தொடர்ச்சி, சொல்லின் இயல்பான பொருள் என்ற அடிப்படையிற்றான், ஒரு தொடரின் பொருளைக் காண முயல வேண்டும். இவ்வியலின்கண் ஒடிவரும் பொதுக்கருத்து அகத்திணையாம். “தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்” என்ற முன்தொடரின் பொருள் தெளிவானது. தலைவனது பிரிவில் தலைவிபடும் ஆறாத்துயரை அத்தொடர் குறிக்கும் மிடல்” சொல்லுக்கு வலி-பேராற்றல்-துணிவு-என்பதே இயல்பான பொருள்.

உள்ளம் அழிய ஊக்குநர் மிடல் தபுத்து (ப்திற்.13)

ஒடாப் பூட்கை மறவர் மிடல்தப (பதிற். 57)

அடங்காதார் மிடல்சாய அமரர்வந் திரத்தலின் (கலி. 2)

வலியினாற் செய்தல் என்பது வேறு வலிந்து செய்தல் என்பது வேறன்றோ? மிக்க காமத்து அடல் என்றிருப்பின், பிறரை வருத்தி வலிந்து வம்பு செய்தல் என்ற பொருள்படுமன். பெருந்தினை அகத்தினை ஏழனுள் ஒன்றாதலானும், அகத்தினை அன்புத்திணை யாதலானும், அகத்துறை எதற்கும் அன்பிற்கு உள்ளப் புணர்ச்சிக்கு முரணாக உரை காணல் அடித்தவறாகும். பெருங்காமத்தால் தலைவி செய்யும் துணிவுச்செயல் என்பது மிக்க காமத்து மிடல் என்ற தொடரின் பொருள். கழிகாமுகன் ஒரு பெண்ணை வம்பு செய்து கூடுதல் என்ற உரைமரபு என்னானும் பொருந்தாது. இன்ன செயல்கள் நடந்திரா என்பது என் வாது அன்று.இவற்றிற்குத் தமிழ் மூதறிஞர்கள் சமுதாய ஒழுக்கத்திற்கேற்ப ஆய்ந்தெடுத்து அறிவோடும் பண்போடும் அமைத்த அகத்திணைக்கண் இடமில்லை என்பது என் அதிகாரத் துணிபு.

செய்வதறிகல்லேன் யாதுசெய்வேன்கொல்லோ
ஐவாய் அரவின் இடைப்பட்டு நைவாரா
மையில் மதியின் விளங்கு முகத்தாரை
வெளவிக் கொளலும் அறனெனக் கண்டன்று (கவி. 62)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/220&oldid=1400211" இலிருந்து மீள்விக்கப்பட்டது