பக்கம்:தமிழ்க் காதல்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

தமிழ்க் காதல்


208 தமிழ்க் காதல் என்பது கபிலர் பாட்டு, காதலனும் காதலியும் உறழ்ந்து பேசிக் கொள்ளும் ஊடல் நடையில் அமைந்தது.தலைவன் தலைவியை இழுத்துப் புல்லுகின்றான். \ - தலைவி. நான் விரும்பாதபோது என்னைக் கைப்பற்றிப் புல்லலாமா? - r தலைவன்: எனக்கு விருப்பமாக இருந்தது. உன்னைத் தழுவினேன். தலைவி: தனக்கு இனிது என்று வலிதில் பிறருக்குத் துன்பம் செய்யலாமா? - தலைவன்: நின் அறிவைக் காட்டாதே. தமக்கு இனிதென்று - தண்ணிர் குடிப்பார்கள். இனிதா என்று தண்ணிரைக் கேட்டுக் குடிப்பார் உண்டோ? காமத் துயர்ப்படுகின்றேன்; யாது செய்வதென்று அறியேன். திங்கள்போலும் ஒளியுடைய முகப் பெண்களைக் கைப்பற்றிக் கொள்ளுதலும் அறம் என்று சொல்லப்படும். - . . .” - தலைவி. (தன்னுள்) கெளவிக் கொள்ளுதல் அறமாம். இவனும் நம் சொல்லைக் கேளாது வருத்துகின்றான்.முற்பிறப்பில் இருவரும் ஒன்றாகவும் வாழ்ந்திருக்கின்றோம். இனி இவன் எண்ணத்துக்கு இணங்க வேண்டியதுதான். . . . இங்ங்ணம் உரையாடல் புணர்ச்சியாக முடியப் பார்க்கின்றோம், அது கூடலை மிகுப்பதற்கு மேற்கொண்ட ஊடற் பேச்சேயன்றி, இக் காதலர்கள் அன்பற்றவர்கள், உள்ளம் ஒன்றாதவர்கள் என்று கருத்தாகாது. காதலும் அன்பும் இல்லாதவர்கள் இவ்வண்ணம் நயமாக நெடிது உரையாடார்கள். ஊடற் காலத்துக் காதலர்கள் உறழ்ந்து உரையாடும் ஒருவகையைப் புனைந்து காட்டுகின்றார் கபிலர். புலவி துணுக்கம் என்ற திருக்குறள் அதிகாரத்தை ஒப்பு நோக்குக. . பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்ததின் மார்பு (குறள். 1311) ஆதலின் ஊடலுவகையில் வரும் காதல் மொழிகளை உணர்ச்சி நீக்கிப் பொருள் காணல் வேண்டும். வெளவி' என்ற சொல்லுக்கு 'வலிந்து' என்பது அகராதிப் பொருள் எனினும்,அச்சொல் அகச் செய்யுளில் வருதலானும் புணர்ச்சிக்கு முன் காதலன் வாயினின்று பிறத்தலானும் இடத்திற்கேற்பக் கருத்துரைக்க வேண்டும். விரும்பாத பெண்ணை வலிந்து வெளவிப் புணர்தல் அறமாம் என்று சொன்ன நூல் எது? இராவணன் செயல் அறமற்றது. கொடிதினும் கொடிது என்பதை உணர்த்துதற்கென்றே பெருங்காப்பியம் பிறந்தது. எல்லா நல்லறங்களும் நல்லாற்றல்களும் இவ்வொரு தீச் செயலால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/221&oldid=1238932" இலிருந்து மீள்விக்கப்பட்டது