பக்கம்:தமிழ்க் காதல்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக் குறிக்கோள்

211


உண்டு. இவ்வகை நினைவும் சொல்லும் ஐந்தினைப் பாலன நாண் வரம்பு இகவாதன. இவை மிக்க காமமாயினும் தக்க எல்லைக்குள் அடங்கி நிற்கின்றன.'

மள்ளர் குழிஇய விழவி னானும்
மகளிர் தழிஇய துணங்கை யானும்
யாண்டும் காணேன் மாண்டக் கோனை
யானுமோர் ஆடுகள மகளே என்கைக்
கோடீர் இலங்குவளை நெகிழ்த்த -
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே (குறுந் 31)

இது ஆதிமந்தியார் பாடிய அகப்பாடல். “வீரர்கள் கூடியிருக்கும் விழாக் களத்திற்குச் சென்றேன். அங்கு என் தலைவனைக் காணவில்லை. மகளிர் கைகோத்தாடும் துணங்கை யரங்கத்திற்குச் சென்றேன். ஆண்டும் அவனைக் கண்டிலேன். பிற இடங்களுக்கும் சென்றலைந்தேன். யாண்டும் காண்கிலேன்’ எனக் களவுத் தலைவி புலம்புகின்றாள். மள்ளரின் விழாவிற்கும் மகளிரின் துணங்கைக்கும் இல்லங்கடந்து புறப்பட்டே போய்விட்டாள். எண்ணம் சொல் அளவில் அமையாது இயங்கி இச்செய்கை, “மிக்க காமத்துமிடல்” எனப்படும். இப்பாடலை ஐந்திணைக் களவுத் துறையாக இதுகாறும் கருதி வருகின்றனர். அது சரியெனப் படவில்லை. நாண் கடந்த செயலால் களவுத் தலைவி பெருந்திணைத் தலைவியாகின்றாள். களவிலாயினும் கற்பிலாயினும் ஆணும் பெண்ணும் நாண்வரை கடத்தலாகாது காண். களவில் நாண் இறப்பினும் பெருந்தினையாம்: கற்பில் இறப்பினும் பெருந்திணையாம். ஆடுகள மகள் காதலனை ஒடி ஆடித் தேடிய செயல் கூறப்படுதலின் இவ்வகப்பாட்டு பெருந்தினைக்கு இலக்கியமாம் என்று தெளிக. மணமாய தலைவியாரும் தம் கணவன்மார் இருக்குமிடம் தேடிப் புறப்பட்ட செய்திகளைச் சார்த்துவகையில் சங்க இலக்கியத்தில் கற்கின்றோம். வெள்ளி வீதியார் காமநோயால் ஊணும் உறக்கமும் இன்றி நெறிபடு கவலை நிரம்பா நீளிடைச் சென்றமிடலுடையவர்.இச்செயல் கூறப்புகின், பெருந்தினையாயினும் பெயர் சுட்டி வந்தமையின் அகத்திணையாகாது; ஆகாதெனவே அதன் உட்பிரிவான பெருந் தினையும் ஆகாது. இவ்வுண்மையை வருகின்ற இயலில் தெளியலாம். ஆதிமந்தியும் கணவனைத் தேடியலைந்தாள். அதற்குக் காமம் யாதும் காரணமன்று. காவிரி நீத்தம் அவனை அடித்துச் சென்றதுவே காரணம் (அகம்..222). ஆதலின் ஆதிமந்தியின் துணிவுச் செயல் முற்றும் புறத்திணைப்பாற்படும். அவள் செயல் ஒருமருங்கு சிலப்பதிகாரக் கண்ணகியின் செயலோடு ஒக்கும். . 1. ஐங். 14, 237; அகம். 309

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/224&oldid=1400292" இலிருந்து மீள்விக்கப்பட்டது