பக்கம்:தமிழ்க் காதல்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

தமிழ்க் காதல்



தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் என்பது ஐந்திணைத் தலைவியின் ஆராக்காமப் புலம்பல் என்றும்,மிக்க காமத்து மிடலாவது அத்தகைய தலைவியின் துணிவுச்செயல் என்றும், இவை பெருந்திணையாம் என்றும் இவண்வரை விளக்கினேன். அன்புடைத் தலைவியரின் காதல்கள் நாணிறக்கும்போது பெருந்திணை யாகின்றன என்று இவ்விளக்கத்தால் தெளியலாம். நானழிவு கற்பழிவாகாது. நாண் விட்டேனும் கற்பைக் காப்பது தமிழியம். இப்பெருந்திணைத் தன்மைகளைத் தொல்காப்பியர் பின்வரும் நூற்பாவில் விளங்க உரைப்பர்.

உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்
செயிர்தீர் காட்சிக் கற்புச்சிறந் தன்றெனத்
தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு
காமக் கிழவன் உள்வழிப் படினும்,
தாவில் நன்மொழி கிழவி கிளப்பினும்,
ஆவகை பிறவும் தோன்றுமன் பொருளே (தொல். 1058)

இந் நூற்பாவினையும் "ஏறிய மடற்றிறம்” என்று நூற்பாவின் பிற்பகுதியினையும் இணைத்துச் சிந்தியுங்கள். காமக்கிழவன் உள்வழிப்படுதல்’ என்பதும், மிக்க காமத்து மிடல் என்பதும் ஒன்றாம்."தாவில் நன்மொழி கிழவி கிளப்பினும் என்பதும், “தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் என்பதும் ஒன்றேயாம். ஐந்திணை எந்நிலைக்கண் பெருந்தினையாகின்றது? நாணைக் காட்டிலும் கற்புச் சிறந்தது என்று நெறி தெளிந்த பெண்கள், கற்புக் காவலின் பொருட்டு நாண்வேலியைக் கடந்து செல்வார்கள்; அதுவும் அகப்பொருளேயாம் எனத் தொல்காப்பியர் விதந்து மொழிகுவர். "ஆவகை பிறவும்” என்றுஅகத்திணை யாசான் கூறுதலால், காமக் கூறுகள் மிகினும், நாணம் கடப்பினும், உள்ளப் புணர்ச்சிக்கு முரணின்றி நிகழுமாயின், அகப்பொருளாம் என்பது குறிப்பு. எனவே அவ்வகைக் கூறுகள் பெருந்திணைக்கு உரியன என்று அறியலாம்.


ΧΙ

3. ஐந்திணைக் குறிக்கோள்

. அகத்திணையின் உட்பிரிவுகள் மூன்றனுள் கைக்கிளையாவது நிகழா ஒழுக்கம்; பெருந்திணையாவது கழிபேரொழுக்கம்: ஐந்திணையாவது இயல்பொழுக்கம். உனக்குக் குழந்தைகள் எத்தனை என்று ஒரு மாதினை வினவின், உள்ள குழந்தைகளையும் கூறுவாள்; கருவிற் சிதைந்தவற்றையும் கழிசடையாய்ச் சென்றவற்றையும் உடன் மொழிவாள். அகத்திணைத்தாயின் முப்பகுதிக் குழந்தைகளும் இத்தன்மையனவே. அகத்திணையின் அன்புப்பண்பின் விரிவாகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/225&oldid=1400293" இலிருந்து மீள்விக்கப்பட்டது