பக்கம்:தமிழ்க் காதல்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

தமிழ்க் காதல்



ஐந்தினை மாந்தர்கள் நிகழ்ச்சிக்கிடையயே இறந்தவர்கள் என்றும், இறப்பிற் புலம்பி அழுதார்கள் என்றும் கூறுதல் இல்லை. இரவுக்குறிக்குத் தலைமகன் வந்து போகுங்கால்,புலி கிழித்தது, யானை குத்தியது. பன்றி சாடியது, கரடி பிய்த்தது, வெள்ளம் ஈர்த்தது எனத் தலைவனது வீவினைக் கூறலாம். பலருக்கும் பெற்றோர்க்கும் அஞ்சிக் காதலர்கள் உடன் போகுவர், பன்னாள் நெடுவழி ஏகுவர். நடுவழியில் ஒருவர் இறந்தார், ஏனையவர் கதறி நைந்தார் என்று அவலச் சுவையாக முடிக்கலாம்.

நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து
தனிமகள் புலம்பிய முதுபாலை (தொல். 1024)

என்பர் தொல்காப்பியர். புறநானூற்றில் நான்கு பாடல்கள் (2536) உடன்போக்கில் அவல நிகழ்ச்சியைப் புனைகின்றன. எடுக்கவும்: எழுந்திராது மண்ணுக்கு மார்பு அளித்தவனே! இடைச்சுரத்து உயிரை முடித்துக்கொண்ட மள்ளனே! நின் செய்தி கேட்பின் தாய் என்னாவாள் என்று ஒரு காதலி கலங்கித் துடிக்கின்றாள், ஐயோ என்று அலறின், குரல்கேட்டுப் புலி வந்துவிடும், வரின் உள்ள உடலையும் தழுவவிடாது தின்றுவிடுமே, என ஒரு காதலி விம்முகின்றாள். இவை தலைவி புலம்பும் முதுபாலைகளாம். சுரவழியில் தலைவியைப் பறிகொடுத்துத் தலைவனும் புலம்பலாம் அன்றோ? இன்ன நிலையாமைகளைத் தமிழர் அறியாதாரல்லர்: களவுக் காதலர்களுக்குக் கற்புப்படும்வரை சாவு வந்துறாது என்று நம்பினவர்களும் அல்லர் நிலையாமைக்கு என்று புறத்தின்கண் தனியொருதிணை-காஞ்சித்திணை, கண்டவர் தமிழர். எனினும் இந்நிலையாமைப் பகுதிகள் குறிப்பாகவேனும் அகத்திணைக்கண் வாரா.அகத்திணை காமத்திணையே யன்றிக் கவலைத் திணையன்று. கற்புடைக் குமரியின் காதலனைப் பெற்றோர்கள் ஒத்துக் கொள் ளவில்லை; பிறனொருவனைக் கணவனாக்க வலிந்து முயன்று ஏற்பாடு செய்தபோது, அந்நங்கை தற்கொலை செய்து கொண்டாள் என்று நொதுமலர் வரைவுத் துறையைத் துன்பியலாக்கலாம். தம் காதல் எதிர்ப்புக்களைச் சமுதாயத்தில் தாங்ககில்லாது, மேலுலகத்தில் ஒன்றாய் இணைவோம்,மறுமையில் ஒன்றாய்க் கூடுவோம் என்று நஞ்சுண்டு மாய்ந்தாரென முடிக்கலாம். களவுப் புணர்ச்சியில் மெய்யின்பத்திற்குத் தடையில்லை.பருவம்வந்த மக்கள் காதல் வாய்ப்படும்போது கலவியுற முந்துவர். கலவியுறின் கருவுறல் இயல்பினும் இயல்பே. எனினும் களவுக்காலத்துத் தலைவி கருவுற்றாள் எனவும், வயாவும் வருத்தமும் அடைந்தாள் எனவும் குறிப்பிற் கூறலும் இல்லை,இல்லை. . - திருமணத்திற்குப்பின் கற்பொழுக்கத்தில் தலைவன் பொருள்வயிற் பிரிவான். அவன் போகும் கடும்பாலைச் சுரத்தில் நீர் இராது. நீர்மையற்ற கொடு மறவர்கள் இருப்பர். உயிர் அலைக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/229&oldid=1400297" இலிருந்து மீள்விக்கப்பட்டது