பக்கம்:தமிழ்க் காதல்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக் குறிக்கோள்

217


கொடு விலங்குகள் திரியும். நீரின்றி இறந்தான் என்றோ, மறவர்களும் விலங்குகளும் அலைப்ப உயிர்துடித்தான் என்றோ பாடுதல் இல்லை. கொலைபழகிய பாலையிற் செல்கின்றான் என்று கூறலாமேயன்றி, கொலைக்கும் அவனுக்கும் தொடர்பு செய்தல் இல்லை. தலைவியைப் பிரிந்து பரத்தையரைத் தேடி இன்புற்றுத் தங்குவான் என அகத்திணை மொழிவது உண்டு. எனினும் வேற்று நாட்டிற் சென்று பொருளிட்டுங்காலை, ஆண்டு பரத்தையர்களை நச்சி ஈட்டிய பொருளையெல்லாம் இழந்து வெறுங்கையனாய் வீடு திரும்பினான் என்று புகலுதல் இல்லைகாண். பிரிவாற்றாத் தலைவி காம சுரம் கைம்மிக்கு மெலிந்து நலிந்து உயிர் விட்டாள் என்று பகருதல் இல்லை.

இங்ங்ணம் இங்ங்ணம் கூறலாம், கருத்தினை வளர்த்துச் செல்லலாம் என்று காட்டுவதன் குறிப்பு என்ன? ஐந்திணைத் துறைகளுக்குள் விரிந்த புதினமும் ஆழ்ந்த சிறுகதையும் துடிக்கும் நாடகமும் எழுதத்தக்க மூலக்கூறுகள் உள. அத்துறைகளை மரபு விலகி விரிப்பின், உணர்ச்சி தாங்காது ஒடும், உள்ளம் வேகப்படும், கருத்துச் சிக்கலுறும். ஆதலின் இத்தகைய விரிப்புக்கள் ஐந்திணை நிலத்துக்கு ஆகாதவை, அழகு பயவாதவை. ஒருவன் அகப்புலவன் எனின், ஒழுங்குற்ற மரபுமுறைக்கும் முழுதும் ஒத்துப் பாடுவான், பாட வேண்டும்'. இன்ன வரம்புகளும் மரபுகளும் புலவன் தன் கற்பனைக்கு ஒல்லுமா? அவன் தன் சிந்தனைச் செல்வத்தைப் பெருக்குமா?எண்ண முனைப்பைக் கூர்மையாக்குமா? அகத்திணைப் புலவர்கள் என்ற தலைப்புடைய ஆறாவது இயலில் இதுபற்றிய விடை விளக்கத்தைக் காண்போம்.

XII

ஐந்தினை உரிப்பொருளின் இயல்பு

ஒரு சமுதாயத்தில் இல்லற மக்களின் மனநிலைகளும் பொருள் நிலைகளும் அறிவு நிலைகளும் பலப்பல. அன்னோர்தம் காம நாட்டங்களும் ஒட்டங்களும் பலப்பல. இயல்பான காதல் நுகர்ச்சிகளும் உள. புறம்பான வேட்கைகளும் உள. எல்லா இன்பப்பாங்குகளையும் அவற்றின் விளைவுகளையும் ஐந்திணை பாட எடுத்துக்கொள்ளவில்லை என்பது மேற்காட்டுக்களால் விளங்கி நிற்கும். பண்பட்ட காதலர்களிடை நிகழும் பக்குவப் பட்ட இனிய எளிய செவ்விய சிறந்த இன்பப்பான்மைகளைக் கொண்டதுவே நம் ஐந்தினை. ஐந்திணையிலக்கியம் அவாவற்ற பொருளடக்கம் உடையது. செறிவும் சீர்மையும் தழுவியது.

1. ஒநோடாக்டர் மு.வரதராசனார்; ஒவச் செய்தி.ப163,


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/230&oldid=1400299" இலிருந்து மீள்விக்கப்பட்டது