பக்கம்:தமிழ்க் காதல்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

தமிழ்க் காதல்


மேலாகத் தற்காத்துத் தற்கொண்டானைப் பேணிக் குடிக்கடன் ஆற்றும் தமிழ்ப்பெண்ணின் மரபுப் பொறுமை என்ற அறுவகைச் சமுதாய நிலைகளை மீண்டும் நினைவுகூர்க, உள்ளப் புணர்ச்சி என்னும் அகத்திணையில் தலையாய பண்பிற்கும் இவ்வரம்புடைய பரத்தமை ஊறு செய்யாமையும் காண்க.

பரத்தைமை வரம்பு

ஐந்திணைக்கண் முன்விளக்கியாங்கு எத்துறைப் பாலும் பொருள் வரம்பு உண்டு. தமிழகத்தில் இழிபினுள் இழிந்த பரத்தைக் கயத்திகள் இல்லாமல் இல்லை. அதனைச் சில இலக்கியங்கள் சுட்டிக் காட்டாமலும் இல்லை. தாதுண்டு பூவைத் துறக்கும் வண்டுபோலப் பொருளை உறிஞ்சி ஆளைத் தோலாக விடும் அணங்குகள் உளர். அவ்வணங்குகளைக் காதலிகள், கற்பிகள் என மயங்கி இல்லறம் துறந்த தம்பிகளும் உளர். இவரெல்லாம் சமுதாயத்தில் உளராயினும்,ஐந்தினைக்குப் பொருளாகார். இல்லறத்தைத் தலையறமாக மதித்த கணவன்மார்களையும் அன்னவர்களின் இல்லறத்திற்கு இடையூறாகாது ஒழுகிக்கொள்ளும் பரத்தைமார்களையுமே ஐந்தினை பொருட்படுத்துகின்றது எனத் தெள்க.

விழுமிதிற் கொண்ட கேண்மை தொள்விதின்
தவறுநற் கறியாய் ஆயின் எம்போல்
ஞெகிழ்தோட் கலுழ்ந்த கண்னர்
மலர்தீய்த் தனையர் நின்னயந் தோரே (தற். 375)

மனைவியை நினையாத தலைவனைப் பரத்தை இடித் துரைக்கும் பாட்டு இது. ஊரறிய மணந்த நல்லாளைக் கைவிடும் நீ எம்போல்வாரைக் கைவிடாதிருப்பாய்கொல்? தவற்றை நன்குணர். மலரைக் கருகவிடாதே’ என்று தலைவனை ஒரு பரத்தை இல்லற தெறிப்படுத்துகின்றாள். ஆதலின் ஐந்தினைப் பரத்தையை “மனையோள் ஒத்தலின்” (1095) என நிகர்பட மொழிகின்றது தொல்காப்பியம். இப்பெண்டிர்களைப் பொருட் பெண்டிர் களாக,விலை மாதர்களாகத் தொல்காப்பியமும் சங்கப்பனுவல்களும் புனையவில்லை. இப்பரத்தையர்க்கு அமைந்த நற்பெயர் "காமக்கிழத்தி” (தொல், 1096) என்பது கிழத்தி என்ற சொல் லாட்சியால், இந் நங்கையர்தம் ஒருபால் உயர்வு பெறப்படும். பரத்தையர்கள் பொருளையெல்லாம் வவ்வினார்கள் என்றோ, அது காரணமாக ஆடவர்கள் வறுமை யெய்தினார்கள், குடி கெடுத்தார்கள் என்றோ, அதுபற்றித் தலைவியர் பிணங்கினர் என்றோ, மருதப் பாடல்கள் சிறிதும் மொழிந்தில. தலைவனது சிறுவனைத் தெருவிடைக் கண்டபோது பரத்தையர்கள் அவனுக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/251&oldid=1400358" இலிருந்து மீள்விக்கப்பட்டது