பக்கம்:தமிழ்க் காதல்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக் குறிக்கோள்

239


தொடியும் மோதிரமும் அணிந்து விடுத்தார்கள் என அகப்பாடல்கள் (கலி. 82, 84) துவலுகின்றன. இதனால் இம்மங்கையர் பொருட் பெண்டிரல்லர் என்பது தெளிவு.

பரத்தமை வழக்காறு

பண்டைச் சமுதாயத்தில் கணிகை மடந்தையர் இயல்பாகப் பெற்றிருந்த நிலையான செல்வாக்கை நாம் மறைப்பதற்கில்லை. "பாணன் கூத்தன் விறலி பரத்தை யாணம் சான்ற அறிவர் கண்டோர்” என்ற தொல்காப்பியத்தில் (1447), கற்பினில் கூற்றுக்கு உரியவளாகப் பரத்தை எண்ணப்படுவாள்.

எண்ணருஞ் சிறப்பிற் கிழவோன் மேன . (தொல் 109)
கிழவோள் செப்பல் கிழவ தென்ப (தொல். 1092)
தோழிக் குரிய என்மனார் புலவர் (தொல். 1095)
கண்ணிய காமக் கிழத்தியர் மேன (தொல். 1095)

தலைவன் கூற்று, தலைவி கூற்று, தோழி கூற்று என்ற நிகர் வரிசையில், பரத்தை கூற்றும் ஒரு தனி நூற்பாவாக இடம் பெற்றிருத்தலை நினைக. கற்புத்திணையில் எட்டிடங்கள் பரத்தை சொல்நிகழ்தற்கு உரியவை என்று இந்நூற்பாவால் அறிகின்றோம். கற்பியல் பாக்கள் 966. இவற்றுள் பரத்தைமை பற்றியன 279. பாடியோர் தொகை 50. ஒரம் போகியார், மருதன் இளநாகனார், பரணர், ஆலங்குடி வங்கனார், ஒளவையார், தக்கீரர், மருதன் இளங்கடுங்கோ, மாங்குடி மருதனார், மருதனார் என்போர் பரத்தைத்துறை பாடிய வல்லவர்கள். கற்புத்திணையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு கூறு பரத்தைப்பாலதாக இருத்தலின், சங்ககாலத்து இத்துறைப் பாட்டுக்கு இருந்த நன்மதிப்புப் பெறப்படும். அதற்குக் காரணம் சமுதாய மனப்பான்மையே யாகும். பிறன்மனை நயத்தல் போலப் பரத்தமை சமுதாயத்தில் கண்ண்றக் கடியப்பட்டிருப்பின், சங்கச் சான்றோர்கள் அப்பொருள்பற்றிப் பாட முன்வாராரன்றோ? பிறன்மனை நயத்தானைப் போலப் பரத்தை நாடியைக் கண்டு சமுதாயம் வெருவியிருப்பின், வாயில் மறுத்தல், வாயில் நேர்தல் என்ற துறைகளுக்கு இடம் உண்டா? இத்துறைகளின் கருத்து என்கொல்? தலைவனது பரத்தமை தவறு என்பது முதற்கருத்து. இதனை வாயில் மறுத்தலால் அறிகிறோம். எனினும் அவனை என் செய்வது? தவற்றைச் சுட்டித் தழுவிக்கொள்ள வேண்டும் என்பது இரண்டாவது கருத்து. இதனை வாயில் நேர்தல் என்ற துறையால் அறியலாம். மனைவியர்க்குத் தமிழ்ச் சமுதாயம் இயல்பாகக் கற்பிக்கும் மரபுக்கல்வி இது. அதனாலன்றோ குடும்பம் பிளவுபடுவதில்லை. கற்பு மகளிர்தம் உள்ளம் திரிவதில்லை. மக்கட் பேறு குறைவதில்லை. அதனாலன்றோ தமிழ் மன்பதையில் பொறுமைப்பெண் பெருமை பெறுகின்றாள். “பெண்ணிற் பெருந்தக்க யாவுள' என்பது வள்ளுவர்பாராட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/252&oldid=1400359" இலிருந்து மீள்விக்கப்பட்டது