பக்கம்:தமிழ்க் காதல்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

273


சிறப்புடையதே. எனினும் நூல் விரித்தோடும் என்று அஞ்சி, ஒரு சிலரைத்தாம் ஆராய எடுத்துக் கொண்டேன். அச்சிலர்தம் பாடல்களும் இவ்வியலின் கண் அகத்திணை நோக்கொடு ஆராயப்படுகின்றன. காதலர் தம் கிளர்ச்சிகள் புணர்ச்சிகள் பிற உணர்ச்சிகள் என்ற மனநிலை உடல் நிலைகளும், புலவர்தம் காதல் பாடும் திறங்களுமே ஈண்டு விளக்கப்படுகின்றன. அகப்பார்வையே இந்நூலின் நோக்கம். ஆதலின் சங்கப் புலவரின் இயற்கையறிவு வரலாற்றறிவு மொழியறிவுகளை இவ்வாராய்ச்சிக் கண் மிகுதியும் எதிர்பார்த்தற்கில்லை. . . . .

சங்கப்புலவர்களின் புதுக்கூர்மை

அகத்திணை சிறிதும் மீறலாகப் பொருள் வரம்பு உடையது. அணுவளவும் பிசகலாகா முறை வரம்பு உடைய தெனின், அன்ன வல்லிய விதியரன் கொண்ட ஓரிலக்கியம் புலவர்களின் உள்ளக் கால்களைக் கட்டுமன்றோ, எண்ண நாடிகளை ஒடுக்குமன்றோ, கற்பனை யோட்டத்தைத் தட்குமன்றோ, சொல் வரவுகளைத் தடை செய்யுமன்றோ முடிவில் உணர்ச்சிக் கூர்மையை மழுக்குமன்றோ. என்று யார்க்கும் வினவத் தோன்றும், ஐயந்தோன்றும். ஒவ்வொரு விளையாட்டும் ஆடுவது பற்றிப் பல விதிகள் உள; பல நூல்கள் உள்ளன. இவ்விதிகளை மீறாது அவ்வளவையும் நினைந்து எப்படி விளையாட முடியும் என்ற மலைப்பு நூல்களை மட்டும் காண்பவர்க்கு எழும். விளையாடதிருக்கலாம் போலும் என்ற சலிப்பும் தோன்றும். விதிபார்த்து யாரும் விளையாடுவதில்லை. விளையாடிகளுக்குப் பயிலப் பயில விதிகள் அமைந்துவிடும், விளங்கி வரும். மனித முயற்சிக்கும் பயிற்சிக்கும் வாரா அருமைகள் யாண்டுள? விளையாட்டு ஆர்வமும் உணர்ச்சியும் விளைப்பது; அதற்குக் காரணம் இடவெல்லைகளும் செயல் வரம்புகளும் உடைமை, ஆடுநர் விதிகளை வழுவுகின்றனரோ என்று கண்கொட்டாது காணும் களநடுவர் ஒருவர் உடனிருப்பதை அறிவோம். அன்ன வல்விதி சான்றது விளையாட்டு. இவ்விதிகளின் கடு மையாலும் நிலையாலும் அன்றோ ஞாலப் பெரிய ஒலிம்பிய ஆட்டங்கள் நிகழ முடிக்கின்றன. வரம்பின்றேல் வளர்ச்சியில்லை, இடம் பரந்து செல்வதில்லை, காலங்கடந்து நிலைப்பதில்லை. எல்லா நாட்டவர்களும் ஒலிம்பியப் போட்டிகளில் கலந்து ஆடுப; ஆடுதற்காகப் பயில்ப. இவ்வளர்ச்சிக்குக் காரணம் விளையாட்ட விதிகள் இன்று மரபாகி விட்டமை. அடிக்கடி இவ்விதிகள் மாற்றப்படின், நாடு தோறும் மாறியிருப்பின்,நீண்டு பரந்த பயிற்சிக்குத் துண்டுகோல் இருக்குமா? ஆதலின் வளர்வும் பரப்பும் நிலையும் எல்லாம் வரம்பாய் மரபின்மேல் கிளைப்பன என்பது துணிவு. வரம்பிருத்தலின் எல்லோரும் அறிவைச் செலுத்தப, ஆற்றலை முறையாகப் பெருக்குப, முயற்சிப் பயன் உண்டென்று நம்பிக்கை கொள்ப - - . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/286&oldid=1394724" இலிருந்து மீள்விக்கப்பட்டது