பக்கம்:தமிழ்க் காதல்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

தமிழ்க் காதல்



இலக்கண நூல்களில் அகவிதிகளை மாத்திரம் கற்கும் போது, இப் பலவிதிகள் புலமைக் கொல்லிகள்போல அச்சம் தரும். நானுறு புலவர்கள் இரண்டாயிரம் அகப்பாடல்களைப் பாடியுள்ளனரே! புறத்திணைக்கு இவ்வெண்ணிக்கை இல்லையே என்று அகவிலக்கியப் பனுவல்களைக் கற்கும்போது, மலை சிலையாகக் காட்சியளிக்கும். சங்ககால மாணவர்கள் பாடிப்பாடிப் பயின்று பயின்று அகத்துறைகளைக் கற்றனர். விதிகள் வழிகாட்டி யாயின; எண்ண வோட்டத்திற்குப் பாத்தியாயின?அறிவைச் சால்பாக்கின. அதனால் அகம் பாடுவது எளியது இனியது நல்லதெனப் பண்ட்ையோர் கருதினர். எல்லோரும் அகத்துறை பற்றி யெழுதிப் புலமையை வளர்த்தனர்.ஆங்கிலப் பேராசிரியர் சான்லிவிங்டன் லாவே கவிதையின் மரபும் புரட்சியும் என்னும் நூலில் புலவர்தம் பெற்றியை மூன்று நிலைகளாகக் காட்டுவர். 1. மரபுகளை அப்படியே போற்றிக் கொள்ளுதல். 2. மரபுகளைப் போற்றுங்கால் புதிய அறிவும் வனப்பும் பொலியச் செய்து கொள்ளுதல். 3. மரபுகளை முற்றும் ஒதுக்கி விடுதல். சங்கச் சான்றோர் நடுப்பிரிவைச் சேர்ந்தவர். காலங் கடந்த காதல்மரபுகளைத் தத்தம் காலத்திற் கியையப் பொருத்திப் பாடியவர், லாவே கூறுவதுபோல, இயல்பான பொருள்களில் புதையுண்டு கிடக்கும் அரிய உண்மைகளைக் காணவல்ல புத்தறிவினர். தமிழ் இலக்கணங்களான எழுத்து சொல் அகம் புறம் முதலியவை கூறும் எல்லா விதிகளும் காலங் கடந்தவையல்ல. காலத்திற் பல்லவை கழிந்தொழியும்; புதியன வந்து அவ்விடத்தை நிரப்பும். எனினும் உயிருக்கு மூச்சு, உடம்புக்கு என்பு, வாழ்வுக்கு ஒழுக்கம், வணிகத்துக்கு நாணயம், தமிழுக்குத் தூய்மை போல என்றும் மாறாத கூறுகள் ஒவ்வோர் இலக்கணத்துக்கும் உண்டு. வீட்டின் சில பாகங்களை மாற்றலாம், மாற்றுகின்றோம். வேறு சில பாகங்களை மாற்ற முயலின் வீடு மாறிப் போதல் உண்டன்றோ? அடித்தளமும் பரப்பும் கட்டும் சுவரும் கட்டிய வீட்டிற்கு நிலையாக அமைந்தவை. ஆதலின் இலக்கண அமைப்பில் மாறுவதும் மாறாததும் பகுத்தறிந்து, மாறாதது மாறிப் போய்விடாதபடி, மாறுவதை மாற்ற வேண்டும். இக் கொள்கையடிப்பட்ையிற்றான் தொல்காப்பியம் முதலிய நூல்கள் வரையப்பட்டன; பழைமைச் செலவுக்கும் புதுமை வரவுக்கும் வாயில்கள் அமைத்தனர்; அதனால் நிலையான உண்மைகளைக் காத்துத் தந்தன. தமிழ் இலக்கண நூல்களைக் கற்போர் எத்துணையோ புறநடை நூற்பாக்களைக் காண்டார்கள்; கற்ற பகுதிகளை வைத்துக் கொண்டு, எஞ்சிய 1. John Livingston Lowes. Convention and Revolt in Poetry p. 60 2. Ibid p.M 76 3. ஒநோ. முன்பணிக்காலம்: மரபும் இலக்கிய வளர்ச்சியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/287&oldid=1239154" இலிருந்து மீள்விக்கப்பட்டது