பக்கம்:தமிழ்க் காதல்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

275


பகுதிகளையும் ஒப்பிட்டு ஒர்ந்து கொள்க என்று இலக்கணிகள் விடாது கூறும் வேண்டுகோள்களைக் கர்ண்பார்கள். இதனால் தமிழிலக்கணம் கண்ணோட்டம் உடையது என்பது ஒருதலை.

மரபுநிலை திரியா மாட்சிய வாகி
விரவும் பொருளும் விரவும் என்ப (தொல், 990)

சொல்லிய அல்ல பிறவவண் வரினும்
சொல்லிய வகையாற் சுருங்க நாடி
மனத்தின் எண்ணி மாசறத் தெரிந்துகொண்
டினத்திற் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்

துணித்தகு புலவர் கூறிய நூலே (தொல், 1610)

மரபும் மாட்சியும் திரியாதபடி காதற் பொருளை விரித்துக் கொள்க : எனவும், சொல்லாத கருத்துக்களை மாசறத் தெரிந்து சேர்த்துக் கொள்க எனவும் தொல்காப்பியர் கற்பவர்தம் படைப்புக்கும் அறிவுக்கும் வழிவிடுவர். “சொல்லிய அல்ல பிற அவண் வரினும்”என்ற பகுதி தொல்காப்பியத்தின் இறுதி நூற்பா. தமிழ்ப் பேரரசன் இத்தகைய அறிவுரையோடு நூலை முடித்திருத்தலின், அழுத்தமும் நெகிழ்ச்சியும் வன்மையும் மென்மையும் உடைமை தமிழிலக்கணத்தின் தன்மை என்று தெளிக.

அகத்தினை புலவனின் புதுக் கூர்மையை ஒடிக்கும் இலக்கியமன்று. ஏன்? அவ்விலக்கியத்தின் பொருளே காதல். காதலைப் பாடாத காலத்தவர் இலர், நாட்டவர் இலர், மொழியவர் இலர், இனத்தவர் இலர். சிறுகதைக்கும் புதினத்திற்கும் நாடகத்திற்கும் தனிக்கவிதைக்கும் காவியத்திற்கும் காதவே பொருள். இசைக்கும் ஒவியத்திற்கும் வளர்ந்துவரும் திரைக்கும் எல்லாக் கலைக்கும் காதலே பொருள். நாளிதழ், கிழமையிதழ்,திங்கள் இதழ், ஆண்டு மலர்க்கெல்லாம் காதலே பொருள். காதலைப் பற்றி உலகம் தோன்றிய நாள் தொட்டு எண்ணியன எவ்வளவு, சொல்லியன எவ்வளவு, எழுதியன எவ்வளவு, செய்தன எவ்வளவு, அவ்வளவும் அரிச்சுவடியளவு உயிரிருக்கும்வரை பசியிருக்கும், பசியிருக்கும்வரை காமச்சுவை இருக்கும். காமச்சுவை இருக்கும் வரை உலகம் இருக்கும். உலகம் இருக்க வேண்டிக் காதல் புதுமையாகவே இருக்கும்.ஆதலின் அகத்திணையின் உரிப்பொருள்களாகிய புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல்கள் கருத்து வற்றாதவை; பரந்து பாடத்தக்கவை: எப்படிப் பாடினும் இன்சுவையளிப்பவை: எல்லார்தம் வாழ்க் கையிலும் நிகழ்பவை: யார்க்கும் புரிபவை. எனவே, புலவனின் புதுக்கூர்மைக்கு அகத்திணைப் பொருள் ஊற்றிடமாக விளங்கக் காண்பீர்.

நீண்ட காப்பியம் செய்யுள் புலவன் ஒருவகையிற் கட்டுண்டவன்.காப்பியத்தின் ஒட்டங் கருதிப் பல நிகழ்ச்சிகளை இடைமடுத்துக் கூறுவன். முழுமையும் ஒருமையும் கருதிக் கற்பனை குன்றிய கருத்துக்களைப் பொருத்துவான். மருட்கை முதலிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/288&oldid=1394725" இலிருந்து மீள்விக்கப்பட்டது