பக்கம்:தமிழ்க் காதல்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

தமிழ்க் காதல்


சுவைகருதி உலகிறந்த மிகைபாடுகளைப் புகுத்துவான்.கற்பவரின் எண்ணத்தைக் கடைசிவரை கவரவேண்டி வேண்டுமென்றே சில சுவைப்படுத்துவான்.மேலும், சிறந்த புலவனது காப்பியத்தும் அவனது அயர்ச்சி தோன்றக் காணலாம். தொடக்கச் சுறுசுறுப்பு நெடுநாள் வினையில், நீண்ட சிந்தனையில் இடையிடையே மறைவது இயல்பு. இவ்வகைள் கட்டுக்கள் அகப்புலவனுக்கு இல்லை.காதலை நினைத்த துறையில் நினைத்த கூற்றில், அடியளவிற் பாடலாம். ஆண் புலவர்கள் தலைவன் தோழி செவிலி கூற்றாகவும், பெண்புலவர்கள் தலைவன் பாங்கன் பாணன் கூற்றாகவும் பாடலாம். துறைத்தேர்ச்சி முதலியன வெல்லாம் அவரவர் விருப்பம். அகப்புலவன் தனிப்பாடல் செய்பவன். நல்லதொரு சிந்தனை தோன்றுமேல், ஒரு பாடல் எழுதி உலகிற்கு அறிவிக்கும் பெருவாயில் அவனுக்கு உண்டு. அகத்திணையின் அமைப்பால் பலர்தம் சிந்தனை களைச் சமுதாயம் அறிய முடிகின்றது. யார் கண்ட காதற் கருத்தும் ஒன்று சிறிது என்பதற்காக உள்ளடக்க வேண்டுவதில்லை; ஒரு சிறு பாட்டாகவேனும் உருப்படுத்தும் ஆற்றலே அகத்திணை வகுக்கின்றது. பாடுவார்க்கு அகத்திணை போல் பாடுரிமை வழங்கும் இல்க்கியம் பிறிதில்லை என்பது என் கருத்து. ஓரிலக்கிய நெறி பற்றிப் பாடிய நானூறு புலவர்களை எம்மொழியிலாவது காண முடியுமா? தமிழ் மொழி காட்டுதலின், அதன் இலக்கியச்சிறப்பு மிகப்பெரிது என்று உணர்க. அகத் தமிழ் இலக்கியம் தலையாயது என்று அறிக

அகத்திணைப்புலவன் உணர்ச்சித் திறமும் உலகவறியும் உடையவன்; நிலவியற்கையும் காலவியற்கையும் மரஞ்செடி கொடி விலங்குகளின் கல்வியும் பெற்றவன். காதல் உரிப்பொருளைப் பாடுகின்றவன் புணர்ந்தார் பிரிந்தார் என்று வெறுமனே பாடிவிடுதல் இயலாது பாடினும் சிறவாது. உரிப்பொருளுக்கேற்ற இயற்கைச் சூழ்நிலைகளைப் புனைய வேண்டும். நிலமும் காலமும் கருப்பொருளுங் காட்டி உரிப்பொருளைத் திறப்படுத்த வேண்டும்.

முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
துவலுங் காலை முறைசிறந் தனவே

பாடலுட் பயின்றவை நாடுங் காலை (தொல். 948)

என்பதனால் அகப்புலவனுக்கு முதற்பொருள் கருப்பொருள் அறிவு இன்றியமையாதது. அவ்வறிவு பொதுவாக இருந்தாற் போதாது. உரிப்பொருளுக்கேற்ப இயற்கையை வடித்துக் காட்டும் தனித்திறம் வேண்டும். இத் திறம் இல்லாப் புலவன் அகம் பாடுதற்கு உரியவனல்லன் என்று கூடக் கூறலாம். ஆதலின் சங்கத் தமிழ்ப் புலவர்கள் அகத்திணைக் கல்வியையும் இயற்கைக் கல்வியையும் ஒருங்கு பெற்றனர். அகப் பாடல்களில் இயற்கைப் பகுதிகளையும் வரலாற்றுப் பகுதிகளையும் நீக்கிவிட்டால், உரிப்பொருளின் கதி என்னாகும்? பாடுபெறுமா? நீடுபெறுமா? அகப்பாட்டின் யாப்பில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/289&oldid=1394726" இலிருந்து மீள்விக்கப்பட்டது