பக்கம்:தமிழ்க் காதல்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

277


முதல் கருப்பொருட்கட்கு நீண்டுவிரிந்த இடம் இருத்தலால், புலவன் மிக்க இலக்கிய உரிமை பெறுகின்றான். உரிப்பொருளைத் தலையாக வைத்து உலகத்தையே சொல்லும் வாய்ப்புப் பெறுகின்றான். திணை மயங்கலாம், கருப்பொருள் மயங்கலாம் என இலக்கணம் விட்டுக் கொடுத்தலின், வேண்டியவாறு சூழ்நிலை அமைக்கும் புனைவுரிமை பெறுகின்றான். நடுநிலைபட ஆராய்ந்து காணுங்கால் அகத்திணையின் காதற்பொருள், கோவையற்ற தனித்தனிக் காதலுணர்ச்சிகள், தனிச் செய்யுளமைப்பு, முதல் கருப்புனைவு, உள்ளுறையுவமம், மெய்ப்பாடுகள் எல்லாம் இளம் புலவனின் புதுக் கூர்மையை வெளிப்படுத்துகின்றன, வளர்க்கின்றன, வனைவுறுத் துகின்றன. நல்லபிள்ளைபோல் அகவிதிகட்கு அடங்கி இலக்கியம் கண்டமையாற்றான், சங்கப் புலவரின் அறிவு கதிர்போல் ஒளிறுகின்றது; சங்கப் பனுவல்கள் ஞாயிறு திங்கள்போல் நின்று பரந்து வாழ்வொளி வீசுகின்றன. -

அகப்புலவர்களின் திறம்

முதற் பதின்மர்

1. அண்டர் மகன் குறுவழுதியார்

குறுவழுதி மூன்று அகப்பாடல்களின் ஆசிரியர். எல்லாம் களவுத்துறையே. கூறுபவள் தோழி, கேட்பவன் தலைவன். பகற்குறி இரவுக்குறி இடங்களைப் புனையும் வன்மை இவர்க்கு உண்டு. பெண்ணின் இளவனப்பை துண்ணியதாகப் புனைந்துள்ளனர். கூந்தல் நெளிவும் பின்னத் தக்க நீளமும் உடையது; மார்பு பொன்போலும் மஞ்சள் நிறச் சுணங்கு பரந்தது;முலை காம்பு வீங்கிக் கச்சினை நெரிப்பது;

பின்னுவிட நெறித்த கூந்தலும் பொன்னென
ஆகத் தரும்பிய சுணங்கும் வம்புவிடக்

கண்ணுருத் தெழுதரு முலையும் (அகம். 150

)

என்பது இவர் வனையும் குமரித் தோற்றம். • ; தோழி அறிவுமிக்கவள். நம் கண்போல் குவளை பூத்துக் கிடக்கும் நெடுஞ்சுனையில் தலைவன் பகல் முழுவதும் நம்மோடு ஆடி விளையாடினால் என்ன? அதன்பின் தொடர்ந்து இரவும் நம் ஊருக்கு வந்தால் என்ன? என்று கேட்கின்றாள்: இத்தோழியின் தலைவி களவுப்புணர்ச்சியை மிக விரும்புபவள் என்று இதனால் அறியலாம். இரவுக் குறியை இருளும் புலியும் காட்டி அச்சமாகப் புனைவது பெரும்பாலான அகவழக்கு. நிறவொளியில் வேங்கைப் பூ புலிபோலத் தோன்றும்; அப் பொய்த்தோற்றத்தை மெய்யென 上丸4日、 - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/290&oldid=1394728" இலிருந்து மீள்விக்கப்பட்டது