பக்கம்:தமிழ்க் காதல்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

தமிழ்க் காதல்


கிடக்கின்றது. இதனையறிந்த மாணிக்கவாசகர் திருவாசகத்தின் பல பதிகங்கள் இளம்பெண்களை நோக்கியும் மகளிர் விளையாட்டுத் களில் வைத்தும் பாடினர். சங்க காலமோ இயற்கை தழுவிய காதற்காலம் அற்றைச் சமுதாயம் குழந்தைச் சிறுமிகளைக் காதல் விளையாட்டிற் பழக்கியது. சிற்றுார்ப் பெண்கள் வண்டல் மண்ணால் ஒரு பெண் பாவையை அமைத்தனர். அப் பாவைக்கு அழகு பரந்த முலைகளை ஆக்கினர். ஞாழற்பூக்கள் அம்முலையின் மேல் விழுந்து பொலிவூட்டின.பொன்தாது பரந்த அம்மார்பு பருவம் வாய்ந்த காதற் பெண்களின் சுணங்கு நிறத்தைக் காட்டியது:

சிறுவி ஞாழல் தேன்தோய் ஒள்ளினர்
நேரிழை மகளிர் வார்மணல் இழைத்த
வண்டற் பாவை வன்முலை முற்றத்து
ஒண்பொறிச் சுணங்கின் ஐதுபடத் தாஅம்

கண்டல் வேலிக் காமர் சிறுகுடி (நற். 191)

என்று சங்கச் சிறுமியின் காதலுணர்வை அவள் விளையாட்டு முறையிற் காண்கின்றோம். பண்டைத் தமிழ்ச் சமுதாயத்திற்குக் காதலே சமயமாம். அச் சமயக் கல்வியைப் பெண்ணினத்துக்கு விளையாடும் பருவத்தேயே ஊட்டியது என்பதற்கு உலோச்சனார் பாட்டு ஒரு சான்று. - - -

10. ஒக்கூர் மாசாத்தியார்

இப் பெண்புலவர் பாடிய அகங்கள் ஏழும் கற்புத்துறையன. அவற்றுள் ஆறு முல்லைத்திணை மேலன. முல்லைமாலை, முல்லையம்புறவு, முல்லைத்தொகுமுகை, முல்லை மென்கொடி, பூத்தமுல்லை, முல்லையூர்ந்த கல் எனவாங்கு இந்த ஆறு பாடல்களிலும் முல்லை என்னும் சொல் பயின்று வரக் காணலாம். ஓர் அகப்பாட்டு மட்டும் மருதத்திணை பற்றியது. ஈண்டும் மனையுறைகோழி, வெருகினம், மலை என்ற முல்லைக் கருப்பொருளும் பொழுதும் வந்துள. இப்புலமையள் பாடிய புறப்பாட்டு ஒன்றே, அதுவும் மூதின்முல்லைத் துறையேயாம், இவ்வாற்றால் மாசாத்தியார் முல்லைப் புலவர் என்று போற்றத்தக்க வராவர்.

அகத்திணை யிலக்கியத்திற்கு உரியவர் பன்னிருவர். தலைவன் பாங்கன் தலைவி பாங்கி செவிலி பாணன் பரத்தை என்றிவர் அவ்விலக்கியத்தில் பேரிடம் பெறுப. கூத்தன் விறலி அறிவர் கண்டோர் முதலான ஆட்கள் மிகப் பயில்வதில்லை. உழையர் என்பவர் கூற்றாகச் சங்கவிலக்கியத்துள் வரும் பாடல்கள் மூன்றே (அகம் 324, 384, 354). இவற்றுள், வரும் முதலிரண்டினை மாசாத்தியாரும் இறுதியதைக் கடுவன் மள்ளனாரும் பாடியுளர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/305&oldid=1394744" இலிருந்து மீள்விக்கப்பட்டது