பக்கம்:தமிழ்க் காதல்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

291



சுறவினம் கலித்த நிறையிரும் பரப்பின்
துறையினும் துஞ்சாக் கண்ணர் . .

பெண்டிரும் உடைத்திவ் வம்பல் ஊரே (நற். 223)

கடலலைகள் துரங்கினாலும், இவ்வூராரின் கண்கள் தூங்கா என்று அலர்மேல் பழியிட்டு வரைவு முடுக்கும் தோழியின் ஒட்பத்தைக் காண்மின்.

உலோச்சனாரின் திணைத்தலைமகள் களவிலும் கற்பிலும் காமம் மீதுர்ந்தவள்; தலைவனை அகலாது உறையும் ஆசையினள்;பகற்குறியும், அன்றே இரவுக்குறியும் விரும்பும் பெருவேட்கையள். 'இவள்தம் காமம் பெருமையின் காலை என்னாள்' (நற். 323) என்ற தோழிதலைவியின் உவராக்காமத்தை வெளிப்படுத்துகின்றாள். அலரினால் தலைவனது தேர்வருவதில்லை எனவும், ஒருக்கால் வந்தாலும் என்னை அணைவதற்கு முன்னே அலரினால் திரும்பி விடுகின்றது எனவும் தலைவியின் அவலப்புலம்பலை உலோச்சனார் பாடல்களில் கேட்கின்றோம். நெய்தற்றிணையில் குறிஞ்சிப் புணர்பொருள் பாடவல்ல இவர், உரிய இரங்கற் பொருளும் பாடவல்லவரே. -

என்ன ராயினும் இனிநினை வொழிக
அன்ன வாக இனையல் தோழியாம்

இன்ன மாகநத் துறந்தோர் நட்பெவன் (நற். 64)

மிகப்பெரிய உள்ள வேக்காட்டிலிருந்து பெர்ங்கிய தலைவியின் குரல் இப்பாட்டு. என்னராயினும், அன்னவாக, இன்னமாக எனவரும் வினாச்சுட்டுச் சொற்கள் அவளது ஆழ்ந்த வருத்தத்தைப் புலப்படுத்த வில்லையா? கடற்சோலைக்கு எல்லா இனிமையும் இருந்து என்ன பயன்? அச்சோலைக்கண் அவரது தேரின் இன்னொலி கேட்க வில்லையே என்று ஒரு தலைவி வாய்விட்டுக் கேட்கும்போது, அவளது ஏக்கத்தை உணர்கின்றோம்.

காதல் விளையாட்டு

இன்று தமிழ்ச் சிறுமிகள் படைத்தின்புறும் விளையாட்டு சமயச் சார்புடையது. கோயில்கள் கட்டியும், குளங்கள் அமைத்தும், ஆண் பெண் தெய்வங்கள் நிறுவியும், கிடைத்த இலை தழைகளால் பூசை செய்தும், குழந்தை முறையில் கும்பிட்டு விளையாடக் கர்ண்கின்றோம். கி.பி. ஐந்தாவது நூற்றாண்டிற்குப்பின் தமிழ்ச் சமுதாயத்தின் நெஞ்சும், சொல்லும், செயலும் சமயவுயிர்கொண்டு இயங்கின. தமிழ்ப்பெண்கள் சமயவுணர்வு மிக்கவர்களாகத் திகழ்ந்தனர். ஒரு கொள்கை நின்று நிலவவேண்டுமெனின், அது பெண்களிடைப் பரவுதல் வேண்டும். சமுதாயம் தாயாம் தன்மையுடையது பெண்ணினத்தையே தற்காப்புக்கு நம்பிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/304&oldid=1394743" இலிருந்து மீள்விக்கப்பட்டது