பக்கம்:தமிழ்க் காதல்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

தமிழ்க் காதல்



சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி

மறுகிற் பெண்டிர் அம்பல் தூற்ற (நற். 149)

அம்பல் என்பது மெய்ப்பாட்டால் துாற்றல் அலராவது சொல்லால் துற்றல், தலைவியின் களவொழுக்கத்தை ஊர்ப் பெண்டுகள் தெருவில் கண்சாடையால் பரப்புவர்; இப்படி ஒரு குமரி செய்யலாமா என்று மூக்கில் விரல் வைத்து வியப்பர்; ஆனால் வாய் விட்டுப் பேசார், உண்மையில் அலரைவிட அம்பலே ஆற்றலு டையது, மூடி மறைக்கும் போதுதான் கருத்து விரைவாகவும் குறைவாகவும் பரவும். மறையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஒற்றிக் கேட்கும் ஆசையும் தோன்றும். ஆதலின் “அம்பல் தூற்ற” என்று பரவும் பெருக்கை உலோச்சனார் கூறுவர். ஊர்ப் பெண்கள் முணுமுணுத்துப் பேசுவதற்கு, நாரைக் கூட்டம் ஒலித்தாற்போல என உவமையாளுவர்.

உலோச்சனாரின் அகத்தோழி தலைவிக்கேற்ற நடப்பு உடையவள்; தலைவியின் காமமிகுதியை அறிந்து அதற்கொப்ப வழிவகுப்பவள். கடற்பாங்கரில் ஊறுகள் பல இல. ஆதலின் இரவுக்குறி வருக என்று தலைவனை அழைக்கின்றாள் தோழி.

இனிதே தெய்யவெம் முனிவில் நல்லூர்
இனிவரின் தவறும் இல்லை; எனையது உம்
பிறர்பிறர் அறிதல் யாவது .

தமர்தமர் அறியாச் செறிவும் உடைத்தே (நற். 331)

உறவினரும் அறியாத மறைவிடம் உண்டு; இனிது வருவாய் என்று ஆர்வமாகக் கூப்பிடுகின்றாள். தோழியை ஒட்பமுடையவளாகவும் களவுக்கு உதவுபவளாகவும் வடிப்பர் புலவர், பகற்குறி வந்த தலைவனை, "நீ இம்மால்ையில் திரும்ப வேண்டா. நெடுந் தொலைவிலிருந்து வருபவன் போலக் காட்டி எம் வீட்டிற்கு நின் இளையரோடும் குதிரையோடும் வருக. உன் தொலைவையும் அயர்வையும் கண்டு எம் பெற்றோர் விருந்தாக ஏற்றுக்கொள்வர். கடற்றுறை பிளவுடையது, சுறாக்கள் சினமுடையன, பொழுது இரவாயிற்று, தோன்றலே செல்லற்க என்று எம்மவர் வேண்டுவர். அவர் தம் சொல்லுக்கு இருப்பவன் போல எம் வீட்டில் இரவில் தங்குக” என்று நயமாக வழிகாட்டுகின்றாள் தோழி (அகம் 900) எனினும் களவு வரைதல் வேண்டும் என்பதனையும்,அதனைச் செய்விப்பது தன் கடன் என்பதனையும் தெளிவாக அறிந்தவள்; தலைவியும் தலைவனும் காமம்.மிக்கவர் என்பதற்காக நீடித்த களவு கூடாது என்று கண்டவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/303&oldid=1394742" இலிருந்து மீள்விக்கப்பட்டது