பக்கம்:தமிழ்க் காதல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

தமிழ்க் காதல்



மகளுக்கு இரங்கும் தாய், சிறுமியின் மேனிமென்மை, மனத்திண்மை, தான் அவளை வளர்த்த ஒவியம், தன்னிடம் ஒரு சொற் சொல்லாது சென்ற அன்பின்மை, சுரநெறியின் அச்சமும் எல்லாம் ஒருங்குதோன்றப் புலம்புங்கால், பாட்டு நெடும் பாட்டாகிவிடும். ஒர் உளரை ஒரு நாட்டை ஒர் அரசனைப் பாட்டுப்படுத்த முனைந்த புலவனுக்குத் தொடர்பான சில வரலாற்றுக் கூறுகள் கண்முன் நிற்கின்றன. அவற்றைச் சுருங்கச் சொல்லுதற்கும் அடிகள் பலவேண்டும். அரசியல் வாழ்க்கை வாழ்ந்த பரணர் நக்கீரர் கல்லாடர் மாமூலர்தம் அகநானூற்றுச் செய்யுட்களின் நெடுமைக்கு இதுவே காரணமாம். மகட்போக்கியதாயிரங்கல், வினைமுற்றி மீளுந் தலைமகன் தேர்ப்பாகற்குக் கூறல், இடைசுரத்துத் தலைமகன் தன் நெஞ்சினைக் கழறல் என்பனபோன்ற சில துறைகளும், முதல் கரு உரி என்ற முப்பொருளின் முழுக்காட்சியும், போர்க்களச் செய்தியும், பிற அகத்தொகைகளினும் அகநானூற்றிற்றான் பொலிந்து தோன்றுவ, இப் பொருள் மாட்சி அடி நீட்சியால் ஏற்பட்டது. அகநானூற்றுக்கு நெடுந்தொகை என்ற மறுபெயர் இக் குறிப்பை உட்கொண்டதாகும். 9-12 அடி யெல்லைப்பட்ட நற்றிணைத் தொகையில், முதல் கரு உரி என்ற மூன்றும் பெரும்பாலும் தன்னொத்து விளங்குதலைக் காண்கிறோம். வரலாற்றுச் செய்திகள் நீண்டு போகாமல் அடக்கமாகக் குறிக்கப்பட்டுள. நெடுந்தொகைபோல விரிவும் குறுந்தொகைபோலச் சுருக்கமும் இன்றி, இடைநிகர்த்தாய் அளவுபட அமைதலின், 'நல்’ என்ற அடை இத்தொகைக்கு வழங்கப்பட்டது. 4-8 வரையான குறுந்தொகைச் சிற்றடிகள் முதலும் கருவும் நன்கு புனையப் பெரிதும் இடந்தரா, உரியோ அகப்பாட்டில் கட்டாயம் இடம் பெறவேண்டும் பொருள் ஆதலின் இத் தொகைக்கண் உரிப்பொருள்கள் முதலாட்சி பெறலாயின. இயற்கைப் பொருள் அழகு காட்டுவது. அவ்வழகினை இலக்கியத்திற்கான இயற்கைபற்றிய அறிவு வேண்டும். காதல் என்னும் உரிப்பொருளோ இயல்பிலே இன்பம் ஊட்டும் மெலிய உணர்ச்சியாதலின், அத் தொகைகளுள் உரிப்பொருள் சிறந்த குறுந்தொகையை முதற்கண் பலர் கற்பாராயினர். பலர் கற்கும் நூலாகத் திகழ்ந்தமையின், உரையாசிரியர்களும் இத்தொகை யிலிருந்தே பெரிதும் மேற்கோள் காட்டுவாராயினர். சுருக்கம் எளிமை இனிமையோடு இருந்தமையால், அகப்பாடல்களைத் தொகுக்க முயன்ற சங்கச் சான்றோர், முதன்முதல் குறுந்தொகை யைத் தொகுத்துத் தொகைப் பயிற்சி பெற்றனர். . *. - R அகம் என்னும் ஒரு பொருள் நுதலிய, ஆசிரியம் என்னும் ஒரு பாவால் ஆகிய 1200 பாடல்களையும் ஒரு தொகையாக்க வேண்டும்; அங்ங்னம் ஆக்காது, அடிக்கணக்கை அளவாகக் கொண்ட காரணம் என்ன? எட்டடி வரையுள்ள பாடல்களில் உரிப்பொருள் சிறந்தும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/32&oldid=1237124" இலிருந்து மீள்விக்கப்பட்டது