பக்கம்:தமிழ்க் காதல்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

307



காதற்களத்தில் அறிவுடையோர் தோற்பர். உணர்ச்சியுடையோர் இன்பம் சிறப்பர். களவு என்னும் சொல்லுக்குத் திருட்டுக் குற்றம் என்பது வழக்குப் பொருள். அகத்திணையிலோ அச்சொல் உயர்ந்த ஒழுக்கமாகிறது. “அன்பின் ஐந்திணை களவெனப்படுவது” எனப் புகழ்பெறுகின்றது. ஆதலின், நின்னை வெளவிக்கொள்வேன் என்று காதலன் கூறும்போது, தனது ஆராக்காமத்தை.விரைந்து அணையத் துடிக்கும் எழுச்சியை அறிவுறுத்துகின்றான். “வெளவினின் முயங்கும்”“வளைமுன்கை பற்றி நலிய” “கூந்தல் எஞ்சாது நனிபற்றி" (கலி. 47, 15, 54)எனப் பிற கலிகளிலும் கபிலர் சொற்களை ஆளும் முறையைக் காணலாம். ஆதலின் பெருந்திணைபற்றி இவர் யாதும் பாடவில்லை என்று தெளிக

அகத்திணைக்கண் பயின்றுவரும் பல புனைவுகளுக்கு உள்ளத்தின் ஆழத்தை, உணர்ச்சியின் வாயிலைக் கண்டு கொள்ள வேண்டும். தலைவன் பிரிந்தால் தலைவி இறந்துபடுவாள் என்று தோழி கூறுவாள். பிரிவு வருத்தம் இறப்பிற்கு ஒப்பப் பெரிதாகும் என்பது இதன் பொருள். புறவொழுக்கம் ஒழுகிய தலைவன் தலைவியின் கால்மேல் வீழ்வான் என்பது மருதப்புனைவு. தன் குற்றத்தை உடன்பட்டு நாணிப்பணிந்து வேண்டுவான் என்பது இதன் பொருள்.குமரி மகளை ஐயப்பட்டு, வெளியிற் செல்லர்தே என அன்னை கோலால் அடிப்பாள் என்று பாடுவது உண்டு. மிகக் கடிந்து உரைப்பாள் என்பது பொருள்.

குறிஞ்சிப் பாட்டு

மலையும் மலைப்பாங்கரும் ஆகிய சூழ்நிலையில் வைத்துக் களவொழுக்கத்தைப் புனையவல்ல பேராளர் கபிலர். களவின் பல துறைகளும் இவரிடத்துப் பாடுபெறுகின்றன. களவுத் துறை களுள்ளும் வரைவுத்துறைகளை விரும்பிப்பாடும் இயல்பினர் என்று அறிகின்றோம். அதனாலன்றோ ஆரியவரசன் பிரகத்தனுக்குக் குறிஞ்சிப்பாட்டை அறத்தொடுநிலை என்னும் துறையில் வைத்துக் கற்பித்தார். குறிஞ்சிப்பாட்டு 61 அடிகளால் அமைந்தது. இப்பாட்டினுள் பல துறைகளுக்கு இடனுண்டு. எனினும் எல்லா அடிகளும் அறத்தொடு நிலை என்னும் ஒரு துறை நோக்கியே இயலுகின்றன. தலைவியின் களவினை அன்னைக்கு முறையாகவும் அறமாகவும் வெளிப்படுத்துவதே இப்பாட்டின் முடிந்த நோக்கம். அகத்தினையாவது தனிநிலையுடையது, தொடர்கதையன்று, நிகழ்ச்சிகளைக் கோவைப்படுத்துவது இல்லை என்று முன்னர்க் கற்றோம். அவ்வமைப்பிறகு மாறான ஒரு போக்கினைக் குறிஞ்சிப்பாட்டிற் காண்கின்றோம். -

நிகழ்ந்த வண்ணம் நீநனி யுணரச்

செப்பல் ஆன்றிசின் சினவா தீமோ
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/320&oldid=1394762" இலிருந்து மீள்விக்கப்பட்டது