பக்கம்:தமிழ்க் காதல்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

தமிழ்க் காதல்



என்று தோழி அடிப்போடுவதிலிருந்தே குறிஞ்சிப் பாட்டு ஒரு கோவைப்பாட்டு என்பது வெளிப்படை தலைவியும் தோழிய, தினைப்புனம் காக்கச் சென்றதும், சுனையாடிப் பூக்கொய்து இை யோட்டியதும், நாய் கண்டு அஞ்சியதும், மணமிக்க இளையவிரன் ஒருவன் அணுக வந்து அச்சம் தவிர்த்ததும், தான் எய்த விலங்கினங்களைக் கண்டீரோ என அவன் வினவியதும், அதற்குத் தலைவியும் தோழியும் வாளாவிருந்ததும், களிறுதரு புணர்ச்சியும், யாறுதரு புணர்ச்சியும், பகற்குறியும், இரவுக்குறியும், இரவுக்குறி யிடையீடுகளும் எல்லாம் தொடர்பாக இப்பாட்டின்கன் ஒடுகின்றன. அகப்புலமை சான்ற கபிலர் அகத்திணையியல்புக்கு முரணாகப் பாடினார் என்று பழிக்கலாமா? அல்லாது அகத்தினை தொடர்கதை இயல்பும் உடையது என்று மொழிந்து விடலாமா?

குறிஞ்சிப்பாட்டுக்கு யாதொரு துறையும் எழுதப்பட வில்லை என்பது எடுத்துக் காட்ட விரும்புகிறேன். "ஆரியவரசன் பிரகத்தனுக்கு தமிழறிவித்தற்குப் பாடியது” என்று மட்டுமே எழுதப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்குச் சிறந்தது அகத்திணை. அகத்திணையுள் களவியற் பகுதி வனப்புடையது ஆதலின் வேற்று மொழியாளனாகிய ஆரியவ்ரசனுக்குக் களவியலைக் கற்பித்தாற் போதும் என்று கபிலர் கருதினார் போலும். களவிலக்கணத்தில் அறத்தொடு நிலை கடைசித் துறையாகும். அத்துறைமேல் எழுந்த பல பாடல்களில் முன்னிகழ்ச்சிகள் ஒரளவேனும் சொல்லப் பெறுதலைப் பார்க்கின்றோம். (கலி. 7, 36; அகம். 48) தோழி செவிலிக்கு ம்றைவைப் புலப்படுத்தும் போது தலைவிக்கு ஒருவனோடு உறவுற்ற காரணங்களைத் தொடர்பு படச் சொல்லும் கடப்பாடு உடையவள் அன்றோ? ஆதலின் குறிஞ்சிப் பாட்டில் களவுத்துறைகள் கோவையாகத் தோன்றுகின்றன. கற்பிக்கும் நோக்கொடு யாக்கப் பட்டமையின் களவு நிகழ்ச்சிகள் நிரல்படவும் கதைபடவும் அமைந்தன? வேறுவகையாகவும் ஆரிய மன்னனுக்குத் தமிழைக் கற்பித்திருக்கலாம். அதற்கு மிகுதியான பாடல்கள் வேண்டும். களவுத் துறைகளைப் பற்றிப் பற்பலர் எழுதியுள்ளி செய்யுட்களைப் பொறுக்கிக் கொள்ளவேண்டும்.[1] ஒரு துறைக்கு ஒரு பாட்டாகப் பல பாட்டுக்களை வேற்றுமொழியனுக்குக் கற்பிக்கப்புகுவது ஏலாது என்ற ஆசிரியப் பயிற்சியினால், களவுத்துறை பலவும் அடங்கத்தாமே ஒரு பெரும் பாடல்


  1. அகத்திணைப்பாகுபாடு என்னும் இரண்டாவது இயலின்கண் களவு கற்பு - நிகழ்ச்சிகள் கோவையாகச் சொல்லப்பட்டுள, அங்ங்னம் சொல்லுங்கால், பலர் பாடிய தனிச் செய்யுட்களை மேற்கோளாகக் காட்டியுள்ளேன் என்பதை நினைவுகொள்மின். ஏன்? அகத்துறைகளையெல்லாம் அமைத்து ஒரு தனிப்பாட்டோ, தொடர்நிலைப் பாட்டுக்களோ ஒரு புலவர் பாடியதில்லை; அகத்தினை தொடுத்துப் பாடுவதற்கு உரிய இயற்கையுடையது இல்லை.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/321&oldid=1394763" இலிருந்து மீள்விக்கப்பட்டது