பக்கம்:தமிழ்க் காதல்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

309



இயற்றிக்கொண்டார் கபிலர் என்று அறிய வேண்டும். இதனை உணர்த்துதற்கென்றே (தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது எனத் துறை எழுதிற்றிலர் என்பது என் கருத்து களவொழுக்கப்பகுதி பல வருதலின், குறிஞ்சிப்பாட்டு எனப் பொதுவாகப் பெயரிட்டனர். எவ்வாறாயினும் இந்நெடும் பாட்டு ஒரு துறையின் விளக்கம் என்பதும், தனி நிலையமைப்புக்கு முற்றும் முரணன்று என்பதும், கபிலர் பாட்டின் தொடக்கத்தைக் கொண்டு செல்லும் போக்கிலிருந்து தெளியலாம். -

அன்னாய் வாழிவேண் டன்னை ஒண்ணுதல்
ஒலிமென் கூந்தலென் தோழி மேனி
விறலிழை நெகிழ்த்த வீவருங் கடுநோய்
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்
'பரவியும் தொழுதும் விரவுமலர் தூயும்
வேறுபல் லுருவிற் கடவுட் பேணி
நறையும் விரையும் ஒச்சியும் அலவுற்று

எய்யா மையலை நீயும் வருந்துதி

மகளின் மேனி மெலிவைக் கண்டு தாய் வருந்துகின்றாள், பலரை உசாவுகின்றாள், வெறியாட்டு எடுக்கின்றாள், தெய்வம் பரவு கின்றாள். அன்னையின் அவல நிலையைப் பார்த்தும், தலைவியின் கற்பு மேம்பாட்டை நினைத்தும்,தோழி உள்ளது சொல்ல முன் வருகின்றாள் என்று அறத்தொடுநிலை என்னும் ஒரு துறையை முன்வைத்துப் பாடல் தொடுப்பர் கபிலர். இத் தொடுப்புமுறை தனிநிலை யியல்பைக் காட்டுங்காண். -

குறிஞ்சித்திறம்

கபிலர் மலை வாழ்க்கையர். அவர்தம் அரசத் தோழர்களான பாரி பேகன் செல்வக்கடுங்கோ மலைநாடுகளை ஆண்டவர்கள். குறிஞ்சித்திணையின் முதற்பொருள் கருப்பொருள் நுணுக்க மெல்லாம் நாள்தோறும் நடந்தும் கண்டும் துய்த்தும் பழகிய புலவராதலின்,அகத்துறைக்கும் ஏற்ற சூழ்நிலைகளைப் புதிதுபுதிதாக அமைக்கும்திறம் அவருக்கு எளிதாயிற்று, குறமகளிர் உரையாடுங் கால் அவர்க்கேற்பக் குரவைப்பாட்டு வள்ளைப்பாட்டு என்ற நாட்டுப் பாடல்களைத் தொடுக்கும் யாப்பியலை அவர்பால் காண்கின்றோம் (கலி.39-48). நன்றிக் காட்டும் முகத்தால் புரவலர்களையும் வேந்தர்களையும் அகச்செய்யுட்களில் குறிப்பிடுவர் புலவர் சிலர். வேறு சிலர் அகம் பாடுவது என்ற பெயரால், ஏராளமான வரலாற்றுக் கருத்துக்களைக் கொட்டியிருக் கின்றனர். கபிலர் வரலாற்றறிஞர்,மன்னர் பலரின் நட்பினர், அரசியலில் ஈடுபட்டவர் ஆக இருந்தும், அகத்திணையை அவ்வளவாகப் புறத்திணைக் குறிப்புக்குப் பயன் படுத்தவில்லை. 乓,2,f。 •

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/322&oldid=1394765" இலிருந்து மீள்விக்கப்பட்டது