பக்கம்:தமிழ்க் காதல்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

தமிழ்க் காதல்



எண்ணியாங்கு உவமைகள், புனைவுகள் உள்ளுறைகள், வனப்புக்க: எல்லாம் செய்தற்கு ஒருதிணையறிவு அவர்க்கு மிக்கிருந்ததாதலி: புறம் நாடவில்லை. பத்துப்பாட்டில் முல்லைப்பாட்டு நெடுநல் வாடை பட்டினப்பாலை மூன்றும் அகப்பாட்டுக்கள். அவற்றில் புறப்பகுதிகள் கலந்துள. புறம் களவாது குறிஞ்சிப் பாட்டில் எல்லா அடிகளையும் அகமாக ஆக்கியுள்ளார் கபிலர். அவர் பெற்றிருந்த ஒருதிணை முழுப்பயிற்சியே இந் நல்லாக்த்திற்குக் காரணமாம்.

களவும் கற்பும்

கபிலரின் அகப்பாடல்கள் 197.

களவில் கற்பில் - கைக்கிளையில் தோழிக்கு 24 தோழிக்கு தலைவனுக்கு 3 தலைவிக்கு 41 தலைவிக்கு 6 தலைவனுக்கு 16 தலைவனுக்கு 1 நற்றாய்க்கு 1 பரத்தைக்கு | Tš2. -ਯੂ- ਾਂ இப்பாகுபாட்டினால் கபிலர்தம் இலக்கியத்தில் தோழி தலைமை பெறுகின்றாள் என்று அறியலாம். அவர் யாத்த கற்பின் அகங்கள் பன்னிரண்டே என்றாலும், களவுப் பாடல்களிற் பல கற்புத்தினைப் போக்குடையனவாக உள. கற்பியலில் தலைவனது பிரிவுகளும் தலைவியது இரங்கல்களும் பெரிதும் இடம்பெறும். அவற்றைக் கபிலர் பாடாவிடினும்,அவற்றுக்கு ஈடாக, ஒருவழித் தணத்தல், வரைவிடை வைத்துப் பொருள்வயிற்பிரிதல் என்ற இரு பிரிவுகளைக் களவியலிற் பாடுவர்.

வருவது கொல்லோ தானே வாராது
அவணுறை மேவலின் அமைவது கொல்லோ...

குன்றுகெழு நாடனொடு சென்றவென் நெஞ்சே (ஐங்.293)

வரைவுநாள் வைத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைவன் வரத் தாழ்த்தான். அதற்குக் கவன்ற களவுத்தலைவி தன் நெஞ்சை இழந்து கூறும் பாட்டு இது. அவனொடு சென்ற நெஞ்சம் வருமோ வாராதோ என்று காமம் மிக்க கழிபடர் நிலையில் புலம்புகின்றாள், தலைமகளின் வருத்தத்தைக் கண்டு ஒரு தோழி தான் மிக வருந்தினாள் கூட்டுவிப்பது மட்டும் அன்று, வரைவு முடித்து வைப்பது தன் கடன் என்று துயர்ப்பட்டாள். தோழியை ஆற்ற வேண்டிய ஒருநிலை மலைமகள் பாலதாயிற்று “தேறுவன்மன் யான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/323&oldid=1394766" இலிருந்து மீள்விக்கப்பட்டது