பக்கம்:தமிழ்க் காதல்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

தமிழ்க் காதல்



கத்துகின்றது. இவ்வமயம் தலைவன் தோட்டத்தில் வந்து நிற்கின்றான். தலைவிக்குப் புதுத்துணிபு பிறக்கின்றது. இருளுக்கு அஞ்சிலள், கோட்டான் குமுறலுக்கு வெருவிலள். முருகன் போல, சீற்றம் கொள்ளும் தந்தை இருப்பதையும் பொருட்படுத்திலன் காதணி ஒளி காட்டிற்று. பின்னிய கூந்தலில் பூச்சூடிக் கொண்டான் என்ன துணிச்சல்! ஏணி வழியாக ஏறிச் சென்று தோட்டத்தில் இறங்கித் தலைவனைக் கண்டு இன்புற்றுத் திரும்பி வந்து முன்போல் படுத்துக் கொண்டனள். தோழியைப் பார்த்து மறுநாள்.அன்னை “மகள் ஏணிமேல் ஏறி இயங்கக் கண்டேனே' என்று கேட்கின்றாள். கொதிக்கின்றாள். தோழியின் விடைத் துணிவைக் கேளுங்கள்.

அலையல் வாழிவேண்டு அன்னைநம் படப்பைச்
சூருடைச் சிலம்பிற் சுடர்ப்பூ வேய்ந்து
தாம்வேண் டுருவின் அணங்குமார் வருமே
நனவின் வாயே போலத் துஞ்சிநர்க்
கனவாண்டு மருட்டலும் உண்டே.
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந்திறல்
எந்தையும் இல்லன் ஆக

அஞ்சுவள் அல்லளோ இவளிது செயலே. (அகம். 158)

பேய் நம்பிக்கையும் களவு நம்பிக்கையும் தமிழ்ச் சமுதாயத்தில் காணப் படுபவை. ஆதலின் தெய்வம் வேண்டிய உருவத்தை மேற்கொண்டு யாண்டும் திரியும் என்பதை நீ அறியாயோ? நனவுபோலவே கனவு தோன்றும் என்பதை நீ காணாய்கொல்? என்று அன்னையை ஏமாற்றுகின்றாள் தோழி. அன்னையே, நினைத்துப்பார். தந்தை வீட்டில் இருக்குங்காலத்து இது செய்வாளா? என்று மேலும் சான்று சொல்லுகின்றாள். தோழியின் விரைந்த சாதுரியத்தை இப்பாடலில் கற்கின்றோம்.

அன்னாய் இவனொருவன் செய்ததுகாண் என்றேனா
அன்னை அலறிப் படர்தரத் தன்னையான்

உண்ணுநீர் விக்கினான் என்றேனா (கலி. 51)

தலைவியின் வீட்டிற்கு வந்து தலைவன் தண்ணிர் கேட்டான். கொண்டுவந்து கொடுத்த கையைப் பிடித்துகொண்டதும் ஆ! அன்னை என்று தலைவி கத்திவிட்டாள்.அன்னையும் பதறி வரவே, வேறொன்றும் இல்லை? குடிக்கும்போது இவனுக்கு நீர் விக்கிற்று என்று தலைவி சாதுரியமாக மொழிந்தாள். இங்ங்னம்,தலைவியைக் காட்டிக் கொடுக்காது தோழியும், தலைவனைக் காட்டிக் கொடுக்காது தலைவியும், அன்னை முன் மறுமொழிகின்ற ஒள்ளியர்களாகக் கபிலர் புனைவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/325&oldid=1394772" இலிருந்து மீள்விக்கப்பட்டது