பக்கம்:தமிழ்க் காதல்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

313



இருவர்தம் நட்பு

க்ளவியலை நெடிது இயக்குபவள் தோழி. களவு வரைவாக முடிதற்கு அவள் துணை வேண்டும். ஆதலின் கபிலர் பாட்டுக்களில் தோழி கொள்ளும் பங்கு பெரிது. 124 செய்யுட்கள் அவள் கூற்றாக உள்ளன. குறிஞ்சி நெடும் பாட்டும் தோழி கூற்றே.தலைவியின் வாழ்க்கையோடு முற்றும் ஒன்றியவளாகத் தோழி இயங்குகின்றாள். தலைவியின் ஒருயிரின் இரு தலையாகத் தலைவியையும் தன்னையும் கொள்கின்றாள். (அகம், 12).

விலங்கோரார் மெய்யோர்பின் இவள்வாழாள் இவளன்றிப்

புலம்புகழ் ஒருவ யானும் வாழேன் (கலி. 52)

களவினைப் பெற்றோர் தாமே அறிவாராயின், நாணத்தாலும் அச்சத் தாலும் தலைவி இறந்துபடுவாள்; அவள் இறப்பின், நான் வாழேன் என்று எடுத்துரைத்து, விரைவில் மணஞ்செய்து கொள்ளுமாறு தலைவனை முடுக்குகின்றாள்.

தோழியின்பால் தலைவிக்கும் அசையா அன்பு உண்டு. காமம் என்பது நல்ல தீய நுண்ணுணர்ச்சிகளுக்கு இடனாயது. ஐயம் போலத் தோன்றினாலும், எண்ணம் அறியாது வேறானாலும், சொல் பிசகினாலும், மெய் நிலைதிரிந்தாலும், இன்பம் குறைவுற்றாலும், காமம் காவியாமாக வளர்ந்து விடுவதை அறிவோம். அன்ன தீய போக்கிற்கு அகத்திணை வாய்ப்பளிக்காது. தோழி. சொல்லும் எச் சொல்லையும் தலைவி நம்புவாள். குற்றமாகச் சொல்லினும் குணமாக எடுத்துக் கொள்வாள். -

ஊசலூர்ந்தாட ஒருஞான்று வந்தானை
ஐய சிறிதென்னை ஊக்கி எனக் கூறத்
தையால் நன்றென்று அவனுார்க்கக் கைநெகிழ்பு
பொய்யாக வீழ்ந்தேன் அவன்மார்பின் வாயாச்செத்து
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்மேல்

மெய்யறியா தேன்போற் கிடந்தேன்மன் (கவி. 37)

“ஒருநாள் தினைப்புனத்துத் தனியே நான் ஊசலாடும்போது அவன் வந்தான். ஊஞ்சலைத் சிறிது ஆட்டுக என்று கேட்டதற்கு இணங்கி ஆட்டினான். வேண்டுமென்றே அவன் மார்பில் வீழ்ந்தேன். உண்மையெனக் கருதி என்னை எடுத்தான். மயங்கியவள் போல அவன் மார்பிற் கிடந்தேன்” என்று தோழி தலைவிக்குக் கூறுங் கருத்து, எவ்வளவு கொடியது? கேடு பயப்பது? என்னாவது? எனினும் இது இட்டுக்கட்டிக் கூறுவது என்றே தலைவி எடுத்துக் கொள்வாள். தன் உள்ளோட்டத்தை அறிதற்குத் தோழி மேற்கொள்ளும் பொய்வாயில் என்றே எண்ணுவாள்,[1],


  1. நற்றிணை ; 25 பின்னத்துரார் உரை விளக்கம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/326&oldid=1394774" இலிருந்து மீள்விக்கப்பட்டது