பக்கம்:தமிழ்க் காதல்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

315



உடன்போக்கு பாலைநிலத்திலும் பிற நிலங்களிலும் நிகழலாம், கோடைக் காலத்திலும் இளவேனில் முதலான பிறகாலங்களிலும் நிகழலாம் எனவும், பிரிக்கப்படுவோமோ என்றஅச்சமே உடன் போக்கு பாலைத்திணையாதற்குக் காரணம் எனவும் முன்னர் விளங்கிக் கொண்டோம். பிற நிலங்களிலும் பிற பருவங்களிலும் வைத்துப் பாடலாமாயினும், கோடைக் காலத்துப் பாலைவழி உடன்போக்காகவே கயமனார் பெரிதும் பாடல் யாப்பார். அப்போது தானே தாயின் அவலத்தை உருக்கமாகப் பாட முடியும். தாழ்வின் வருத்தம் முன் துய்த்த வாழ்வின் வளத்தைப் பொறுத்தது. துன்பத்தின் ஆழம் முன் நுகர்ந்த இன்பத்தின் அகற்சியைச் சார்ந்தது.

நிழலான் றவிந்த நீரில் ஆரிடைக்
கழலோன் காப்பக் கடுகுபு போகி
அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த
வெவ்வம் கலுழி தவ்வெனக் குடிக்கிய
யாங்குவல் லுநள்கொல் தானே ஏந்திய
செம்பொற் புனைகலத் தம்பொரிக் கலந்த
பாலும் பலவென உண்னாள் -

கோலமை குறுந்தொடித் தளிரன் னோளே (குறுந் 356)
பொற்கலத்தில் மாக்கலந்த பாலைக் குடிக்க மறுத்த செல்வமகள் நிழலும் நீரும் இல்லாத சுரவழியில் உலர்ந்த வற்றிய சேற்றுக் கலங்கலை எப்படிக் குடிப்பாள் எனச் செவிலித்தாய் முன்னை நிலையோடு ஒப்பிட்டுப் பெருந்துயர் அட்ைவதைக் கருதுக. இரு வேறு நிலைகளை எல்லையளவு புனையும்போதுதான் உணர்ச்சிகள் ஓங்கி எழும். ஆதலின் தாயின் ஆற்றாமையைக் காட்டவேண்டி, மகளின் செல்வவாழ்வையும், செல்லும் வழியின் கொடுமையையும் இணைத்துக் கயமனார் பல பாடல்களில் புனைவர்.

கமஞ்சூற் பெருநின்ற தயங்க முகந்துகொண்டு
ஆய்மடக் கண்ணள் தாய்முகம் நோக்கிப்
பெய்சிலம் பொலிப்ப பெயர்வனள் வைகலும்
ஆரநீர் ஊட்டிப் புறப்போர் -

யார்மற்றுப் பெறுகுவை அளியை நீயே (அகம், 383)

என்பது அவலம் சிறந்த பாட்டு. மக்கள் வளர்த்த வயலைக் கொடியைக் காணுங்கால், இப்போது நீர் ஊற்றப் பெறாது அது வாடுங்கால், தாய் சொல்லும் உருக்கச் சொற்கள் இவை. புரப்பவள் போய் விட்டாள்; இனி உனக்கு நீர் ஊட்டுவார் யார்? நாங்கள் எல்லோரும் எங்களை புரக்க மாட்டாது கவல்கின்றோம். இனி உனக்கு வாடுதல் தவிர வளர்ச்சியில்லை என்று, கேளாத கொடியைக் கேட்கும் எனக்கொண்டு அன்னை புலம்பும் மயக்கச் சொற்கள் யாருள்ளத்தையும் அவலப்படுத்தும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/328&oldid=1394777" இலிருந்து மீள்விக்கப்பட்டது