பக்கம்:தமிழ்க் காதல்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316

தமிழ்க் காதல்



உடன்போக்குப் பாடல்கள் தலைவியின் கற்புத்திண்மையையு, தாயின் அன்பு மென்மையையும்,அம்மென்மையிற் பிறந்த வெகுளியையும் காட்டுகின்றன. தாயின் வெகுளி தலைவன் மேலு: தலைவனின் தாய்மேலும் பாய்கின்றது. பிறந்த நாள் முதல் பெருகிய மகளின் அன்பை ஒருநாட்காதலால் மாற்றி விட்டானே என்று தா, துடிக்கின்றாள். நொது மலாளன், அறனிலாளன், ஏதிலாளன் என்று தலைவனை இகழ்வாக மொழிகின்றாள். என் மகளுக்கு எங்களைப் பிரிந்து உடன்போகும் துணிவு வாராது; அத் துணிவை ஊட்டியவன் அவன் என்று வெதும்புகின்றாள்.

பெருவிதுப் புறுக மாதோ எம்மிற்
பொம்மல் ஒதியைத் தன்மொழிக் கொளிஇக்
கொண்டுடன் போக வலித்த -

வன்கட் காளையை ஈன்ற தாயே (நற். 293)

அத்தகைய கொடிய மகள் ஒருத்தி பெற்றாளே, அவள் அவனைப் பெற்றிரா விட்டால், அவன் பிறந்து வளர்ந்து காளையாகி என் மகளைக் கொண்டு போயிருக்க முடியாதே எனக்கும் அவலம் இராதே என்று தலைவனின் தாயைப் பழிக்கின்றாள். மகளை இழ்ந்த ஒரு தாயுள்ளம் எங்ங்னம் எண்ணும், எங்ங்னம் வளைத்துப் பேசும் என்பதற்குக் கயமனார் பாட்டுக்கள் நல்ல காட்டுக்கள்.

கயமனார் பாடிய புறப்பாட்டு (254) ஒன்று உண்டு. அதுவும் உட ன்போக்கொடு தொடர்பு உடையது. இவ்வுடன் போக்கு களவில் நிகழ்ந்ததன்று. திருமணமாகிய கற்பியல் வாழ்விலும் உடன் போகுதல் உண்டன்றோ, அதனைக்குறிப்பது என்று இப்பாட்டுக் கொள்ளக் கிடக்கின்றது. கணவனும் மனைவியும் பாலைவழியிற் சென்று கொண்டிருக்கையில் கணவன் இயல்பாக மாண்டுவிட்டான். மாண்டான் என்று அறியாது பேதை மனைவி எழுப்பிப் பார்த்தாள். பின்னரே, இறந்தான் என்பதை உணர்ந்தாள். “நின்னை இங்கே மாள விட்டு யான் தனித்து எப்படி ஊர் செல்வேன்? நின் இறப்பை நின் தாய் முன் எப்படி உணர்த்துவேன். உணர்த்தினால் அவளும் இறப்பாள் அன்றோ?' எனப் பன்னிப் பன்னிப் புலம்புகின்றாள் மனைவி. -

இளையரும் முதியரும் வேறுபுலம் படர
எடுப்ப எழாஅய் மார்பமண் புல்ல
இடைச்சுரத் திறுத்த மள்ள -
ஆனாது புகழும் அன்னை

யாங்கா குவள்கொல் அளியள் தானே

இடைச் சுரத்தில் இறுத்தான் என்று வருதலின், உடன் போக்கில் நிகழ்ந்த இறப்பு என்பதும், தலைமகனின் அன்னையைக் குறித்தலின், கற்பில் நிகழ்ந்த உடன்போக்கு என்பதும், வாழ்வைக் குறியாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/329&oldid=1394778" இலிருந்து மீள்விக்கப்பட்டது