பக்கம்:தமிழ்க் காதல்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

317



சாவைக் குறித்தலின் அகமாகாது பாலையாகாது புறமாய் முதுபாலையாயிற்று என்பதும் அறியப்படும். மெய்யாகவே நடந்த ஓர் அவல நிகழ்ச்சியைப் பாடினார் என்று கருதும்படி இப்புறப் பாட்டு நடைப்படுகின்றது. அகத்தும் புறத்தும் உடன் போதலைப் பற்றிப் பாடல்கள் யாத்த இப்புலவரை உடன் போக்குப் பாடிய கயமனார் என்று அழைப்போமாக.

18. கல்லாடனார்

இவர் 9 அகப்பாட்டுக்களின் ஆசிரியர். அவற்றுள் 8 கற்பிற் பாலைத்தினையன. வரலாற்றுக் குறிப்புக்களை நிறைய இடை மடுத்து அகம் பாடும் போக்குடையவர் கல்லாடனார். அக நானூற்றுப் பாட்டொன்றில் (209) பாண்டியன் செழியன், வேங்கடத்தின் புல்லி, முள்ளுர்க்காரி, ஒரி, சேரலர் ஆகியோர் வந்துள்ளனர். பிற பாடல்களில், அஃதை,கோசர், நன்னன், களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் இடம் பெற்றுள்ளனர். நெடுஞ்செழியனது ஆலங்கானத்துப் போரைப் புறநானூற்றில் விரிவாகப் பாடிய கல்லாடனார், அகநானூற்றிலும் அப்போர் ஆரவாரத்தை அலருக்கு உவமையாகக் கூறுவர் என்பது நினையத்தகும். -

பிரிவுபாடும் கல்லாடனார் பிரிந்திருக்கும் கணவனும் மனைவியும் ஒருவர் பண்பை ஒருவர் நினைத்து அமைவர் என்று புனையக் காண்கின்றோம். இடைச்சுரத்துச் செல்லும் தலைமகன் நெய்தல் மலரன்ன கண்வனப்புப் பெற்ற காதலியின் குணங்கள், அன்போடு வந்து இங்கும் தோன்றுகின்றனவே என ஆர்வம் கொள்ளுவன் (அகம். 83) அவர் பண்பை நாளும் நினைந்து உருகுவேன் என்கின்றாள் மனைவி (அகம்.171)

ஓங்கிய நல்லில் ஒருசிறை நிலைஇப்
பாங்கர் பல்லி படுதொறும் பரவிக்
கன்றுபுகு மாலை நின்றோள் எய்திக்
கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப்
பிடிக்கை யன்ன பின்னகம் தீண்டித்
தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ
நானொடு மிடைந்த கற்பின் வாணுதல்
அந்திங் கிளவிக் குறுமகள்

மென்றோள் பெறநசைஇச் சென்றவென் நெஞ்சே (அகம், 9)

இல்லறத் தலைமக்களுக்கு எடுத்துக்காட்டாகும் பாட்டு இது. கணவன் பிரிந்தகாலத்து மனைவி பொறுமையோடு கடன் ஆற்றுகின்றாள். நாண் கடவாத அழகிய கற்பினள் என்று கணவனும் மனைவியை உணர்கின்றான். அவள் குணங்கள் அவனைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/330&oldid=1394780" இலிருந்து மீள்விக்கப்பட்டது