பக்கம்:தமிழ்க் காதல்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326

தமிழ்க் காதல்


தெற்கேர்பு இறைஞ்சிய தலைய நற்பல்
பாண்டில் விளக்கிற் பரூஉச்சுடர் அழல
வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகமொடு

முன்னோன் முறைமுறை காட்ட (171-6)

"பகைவர்களின் யானைப் படையை வெட்டி வீழ்த்திய வீரர்கள் விழுப்புண்பட்டுக் கிடக்கின்றனர். அவர்களைப் பாராட்டிப் புண்நோய் தீர்த்தற்காக நள்ளிரவில் தன் பாசறையைவிட்டுப் புறத்தே வருகின்றான் அரசன். வழிநெடுக உள்ள விளக்கின் பெருந்திரிகள் வாடைக் காற்றுக்கு அணையாது சாய்ந்து வெளிச்சம் தருகின்றன. வழிகாட்டுவேன் வேப்பங்குழை கட்டிய வேலினால் (எஃகமொடு) மறவர்கள் எய்திய புண்களை முறைமுறையாகக் காட்டுகின்றான்” என்பது மேலைப்பகுதியின் பொருள். வேம்பு சொல்லப்படும் இடங்களை நோக்குக. வேம்புக்குப் பேய் அஞ்சும் என்பது இன்றும் உள்ள தமிழ்ச் சமுதாய வழக்கு வேப்பங் குழையடித்தலும் வீட்டின் இறவாரத்தில் வேம்பு செருகுதலும் உண்டு. :

தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ
வாங்குமருப்பு யாழொடு பல்லியம் கறங்க.
காக்கம் வம்மோ காதலந் தோழி
வேந்துறு விழுமம் காதலந் தோழி
வேந்துறு விழுமம் தாங்கிய

பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே (புறம். 281)

வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும் நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும் எல்லா மனையும் கல்லென் றவ்வே (புறம். 296) விழுப்புண் பட்டு வீட்டிற்கு வந்த மறவர்களுக்குச் செய்யும் பலவகைப் பேய்திண்டாக் காப்புக்கள் இவ்விரு புறப்பாடல்களிலும் சொல்லப்பட்டுள. வேம்பு முதலிடம் பெறுவதை நினைக. இப் பாட்டுக்களோடு நெடுநல்வாடைப் பகுதியை ஒத்திடின், விழுப்புண் காணப் போந்த வேந்தனுக்கு வேம்பின் வேலால் (எஃகமொடு - எஃகத்தால்) புண்ணுடையாளர்களைச் சுட்டிக்காட்டினான் என்ற நிகழ்விடத்தைக் கருதின், நெடுநல் வாடையின் வேம்பும் பேய்த்தடுப்பு என்பதும், சமுதாய வழக்கு என்பதும், அதனையே நக்கீரர் இவ்விடத்துச் சுட்டினார் என்பதும் எல்லாம் தெளிவாகும். 'வேம்பு தலையாத்த' என்பதற்கு வேப்பந்தழை கட்டிய என்பதே பொருள். வேப்பந்தார் என்று நச்சினார்க்கினியர் கொள்ளல் பொருந்தாது; வலிந்த உரையாகும். மேலும் ஒரு கருத்தைத் தெளிமின் அரசின் அடையாளப்பூ காலாட்படைக்கு உண்டேயன்றி, வாள் வேல் யானை குதிரை முதலான கருவிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/339&oldid=1394797" இலிருந்து மீள்விக்கப்பட்டது