பக்கம்:தமிழ்க் காதல்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

325


என்றோ ஆசிரியர் விதந்து மொழியாது, எல்லாம் பொதுப்பட மொழிப்படுத்துவர். பெயர் சுட்டாமை அகவிலக்கணம் என்பதை அறிந்தவராதலின், மறவர் நினைவோடு நூலகத்து யாண்டும் பெயர் தோன்றாவாறு, தோன்றிவிடாதவாறு அகமாந்தர்களைப் பொதும்ைப்படுத்துவர். தக்கீரர் வரலாற்றுள்ளம் மிக்கவராயினும், அவ்வுள்ளத்தார்க்கு அகம் பாடுதல் அரிதாயினும், அரியதொரு அகப்படைப்பை அவர் செய்து காட்டிவிட்டார். நெடுநல் வ்ாடையின் பொது வோட்டத்தை நச்சினார்க்கினியர் உணரவில்லை. பொதுச்சொற்களுக்குப் பொதுப்பொருளாக உரைசெய்ய வில்லை. பெருந்தகை என்ற பொதுக் கிளவிக்குப் “பாண்டியன்” எனவும், பலரொடு என்னும் பொதுமை எண்ணிக் கைக்குச் சேரன் செம்பியன் முதலிய எழுவரோடே” எனவும் சிறப்புப் பொருள் கண்டார். இது பொருந்துமா? பாட்டுச் சொற்கள் இப்பொருளுக்குக் குறிப்பானும் இடந்தருகின்ற்னவா? பிற விடத்துக் கற்ற வரலாற்றுக் கருத்துக்களைக் கொண்டு புகுத்தலாமா? அறிஞர் சிந்திப்பாராக. நெடுநல்வாடை நெடுஞ்செழியனை உட்கொண்டு யாத்தது, அவன்முன் பாடியது என்றாலும், பாட்டினுள் சான்று உண்டு கொல்? இல்லாதபோது பாட்டு ஏன் அகத்திணையாகாது?

வேம்பும் பேய்க்காப்பும்

சான்று ஒன்று உண்டு என்பர்நச்சினார்க்கினியார். “இப்பாட்டு: சுட்டி ஒருவர் பெயர் கொள்ளாமையின் அகப் பொருளாமேனும், வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகம் என அடையாளப்பூக் கூறினமையின் அகமாகாதாயிற்று” என்பது அவர்தம் காரண விளக்கம். இதனாற்றான் பாண்டியனைச் சுட்டுவதாகக் கொண்டு மேற்கண்ட உரைகளை எழுதினார் போலும். ஈண்டு இனி நாம் ஆராய வேண்டுவது இவ்வடியில் வரும் வேம்பு அடையாளப் பூவைக் குறிக்கின்றதா? என்பது. சங்க அரசர்களின் வரலாற்றை அறிந்தபின், நெடுநல் வாடையைக் கற்போர்க்கு நெடுஞ் செழியன் போர்வாழ்க்கை நினைவுக்கு வரவே செய்யும். வேம்பு என்ற சொல்லைக் கண்டதும் பாண்டியனது அடையாளப்பூப் என்று சொல்லிடவே தோன்றும். “புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டம்” என்பது நெடுநல்வாடையில் வரும் (126) ஒரடி புலிப்பொறி என்ற தொடரைக் கண்டதும், சோழனது அடையாளம் சுட்டப்பட்டது என்று கூறுவது பொருந்துமா? மெய்யாக ஆராயின் வேலின் தலையில் கட்டியிருப்பதாகச் சொல்லப்படும் இவ்வேம்பு அடையாளப்பூ அன்று, பேய் தீண்டாதபடி கட்டிய காவற்பூ

களிறுகளம் படுத்த பெருஞ்செய் ஆடவர்
ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து

வடந்தைத் தண்வளி எறிதொறும் நுடங்கித்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/338&oldid=1394796" இலிருந்து மீள்விக்கப்பட்டது