பக்கம்:தமிழ்க் காதல்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

337


பறவை போலப் பண்பு தவிர்த்தாள் எனவும், காதலனைக் கண்டதும் வந்த துயரம் போயிற்று, போயநாணம் வந்ததும், பித்துச் சிரிப்பு. ஒழிந்தது எனவும் இறுதிச் சுரிதகங்கள் புணர்ச்சியோடு முடிகின்றன. பெருந்திணைப் பாடல்களின் இறுதிகள் ஐந்தினை யாகின்றன. இவ்வண்ணந்தான் பெருந்தினைச் செய்யுள் அமைய வேண்டும் என்பதை அந்துவனார் பாடல்கள் (கலி. 124-7) கற்பிக்கின்றன. ஆறுபாடல்களும் (ஐந்திணையாகவே முடிதலின், இங்ங்னம் குறிஞ்சியாக முடிப்பதுதான் மாறா அமைப்பு எனவும், தலைவன் வரவு கூறாது"தலைவியின் பெரும் புலம்பல்களையே கூறிச் செல்வது பெருந்திணைப்பாட்டின் இலக்கணம் ஆகாது எனவும் தெளியலாம். பின் வரும் நெய்தற் பகுதி பெருந்திணையாளரின் கூற்று. இரவும் பகலும் போலக் காதலர் வாழ்க்கையில் பிரிவும் புணர்வும் துன்பமும் இன்பமும் மாறி மாறி வரும் எனவும், புணர்ந்து இன்புற்றி ருப்பவர்கள் பிரிந்து துன்புறுபவர்களை இகழவேண்டாம் எனவும், அங்ங்னம் இகழின் அவர்க்கும் ஒருநாள் பிரிவும் இகழ்வும் வருதல் உலகவியல்பு எனவும், அரிய அறத்தை அந்துவனார் பெருந்தினைப் பாடலில் எல்லார்க்கும் உணர்த்துவர் :

மகளிர்,
தோள்சேர்ந்த மாந்தர் துயர்கர நீத்தலும்
நீள்சுரம் போகியார் வல்லைவந் தளித்தலும்
ஊழ்செய் திரவும் பகலும்போல் வேறாகி
வீழ்வார்கண் தோன்றும் தடுமாற்றம் ஞாலத்துள்

வாழ்வார்கட் கெல்லாம் வரும் (கலி. 145)


25. நல்லுருத்திரனார்

இப்புலவர் முல்லைக் கலித்தொகையின் ஆசிரியர். பிற தொகைகளில் இவர்தம் பாடல் இல்லையாதலின், இவர் பாடிய யாப்பு கலிப்பா ஒன்றே என அறியலாம். பிற அகப்புலமையோர் எல்லாரினும் வேற்ான ஒரு தனிக் கூர்மையுடையவர் உருத்திரனார். நாடக வழக்கை விடுத்து உலகியல் வழக்காகவே முல்லைக்கலியை ஆக்கியுள்ளார். முல்லைவாழ் இடையர்களின் சமுதாய இயல்பு களையும், அவ்வியல்புக்கு இயைந்த காதலையுமே புனைந்துள்ளார். அகத்திணை யிலக்கணம் ஊறுபடாதவாறு முல்லை வழக்க ஒழுக்கங்களை நயமாகப் பொருத்தியுள்ளார். காளையை மடக்கியவனுக்கே பெண் கொடுப்பது முல்லைவழக்கம். எவன் மடக்கினும் அவனுக்குப் பெண் மணப்படுவாள். மணப்பட வேண்டுமன்றோ!காளையை அடக்கியவனை விரும்பாத போதும் மணக்க வேண்டுமா? அன்ன அன்பில் மணம் அகத்திணைக்கு முரண் GfT(Fððf. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/350&oldid=1394808" இலிருந்து மீள்விக்கப்பட்டது