பக்கம்:தமிழ்க் காதல்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338

தமிழ்க் காதல்


கோளாளர் எள்னொப்பர் இல்லென நம்மானுள்
தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கொருநாள்
கோளாளன் ஆகாமை இல்லை அவற்கண்டு

வேளாண்மை செய்தன கண் (கலி. 101)

என்றபடி, ஏற்றினை விடுப்பதற்கும் பிடிப்பதற்கும் முன்பே இருவர் தம் ஒத்த உள்ளத்தைச் சுட்டிக் காட்டுகின்றார் புலவர். ஏறு தழுவா முன்னரே ஆயமகனுக்கும் ஆயமகளுக்கும் உள்ள புணர்ச்சி உண்டு என ஆசிரியர் புலப்படுத்தலின், ஏறுகோள் வழக்கம் அகத்திணைக்கு இயைந்து ஒழுகுகின்றது. -

முல்லையின் உரிப்பொருளாவது இருத்தல். தலைவனது பிரிவுக் காலத்து ஆற்றியிருப்பது. தலைவன் குறித்த பருவ வரவு கண்டு தலைவி வருந்துதல், வருந்துபவளைத் தோழி ஆற்றுவித்தல், வினை முடிவில் தலைவன் தேர்ப்பாகனுக்குக் கூறுதல் என்ற கற்புத்துறை மேல் எழுந்த முல்லைச் செய்யுட்கள் சங்கவிலக்கியத்து நிரம்ப உள. இவ்வகைத் துறைகள் கலித்தொகை முல்லைப் பகுதிக்கண் இடம் பெற்றில முல்லைநில மக்களின் சமுதாய ஒழுகலாற்றுக்கு ஏற்பத் துறைகள் அமைந்துள். நல்லுருத்திரனாரின் முல்லைக் கலி 17 பாடல்கள் உடையது; அவற்றுள் ஒன்று (கலி. 109) கைக்கிளைத் திணையாம். ஏனைய வெல்லாம் களவியல் பற்றியவை. பிறர்போல் முல்லைத்திணையில் கற்புத்துறைகளை உருத்திரனார் அமைக்க வில்லை என்று அறிக. களவியலிலும் அவர் கையாளும் துறைகள் பல்வகைப்பட்டனவல்ல, ஒரு சிலவே. அகத்திணையை வரலாற்றுக் கருத்துக்கு வாயிலாகச் சிலர் பயன்கொள்வதுபோல, முல்லைச் சமுதாயத்தின் காதலாறுகளைக் காட்டுவதற்காகவே உருத்திரனார் முல்லைக் கலி பாடினார் போலும், முதல் ஏழு பாக்கள் ஏறுகோள் விழாவைப் பெரிதும் புனைகின்றன.

காதற் களங்கள்

காதலர்கள் கண்டுகொள்ளும் இடவாய்ப்புக்கள் திணை தோறும் வேறுபடுதல் உண்டு. நிலமக்களின் தொழில்களுக்கு ஏற்பக் காதலர்தம் காட்சிகளைப் புலவர்கள் கொண்டு கூறுவர். காண்பிடங்கள் முற்றும் உலகியல் வழக்கத்திற்குப் பொருத்தமாவன. தலைவி கிளிகளைக் கடிந்து தினைப்புனங் காத்து வேங்கைப் பரண்மேல் இருக்கும் போது, குறிஞ்சிக் காதலன் சந்திப்பான். நெய்தல் மகள் காய்தற்குப் பரப்பிய மீன்வற்றலைக் காக்கை கவராதபடி காத்துப் புன்னைமர நிழலில் இருக்குங்காலை இளைஞன் கண்டு காதலாடுவான். நெய்தல் விளைவுகளான உப்பையும் மீன்களையும் பரதமகள் விற்கச்செல்லும் அமயம் காதற்றொடுப்பு நிகழ்தலும் உண்டு, மருதக் காதலிடம் பெரும்பாலும் நெய்தலை ஒத்தது. "இடை நெடுந் தெருவிற்கதுமெனக் கண்டு என் பொற்றொடி முன்கை பற்றினன்” என்று (அகம்.356) நடுத்தெருவைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/351&oldid=1394809" இலிருந்து மீள்விக்கப்பட்டது