பக்கம்:தமிழ்க் காதல்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

339


காதலிடமாக மருதத்திற் புனைவர். பரணர், முல்லைநிலக்குறுமகள் ஆடுமாடு மேய்க்கச் செல்வது வழக்கம்; ஆதலின் இவ்விடங்களில் காதல்கள் நிகழ்ந்த னவாகச் சுட்டுவர் நல்லுருத்திரன்ார். இதுகாறும் நானிலக் காதற் களங்களைக் கண்டோம். காதற் காட்சி பாலை நிலத்து நிகழ்வ தில்லை யாதலின், அதற்குக் களம் இல்லை என்று அறிக (ப193), * - -

காதலர் உரையாட்டு

காதலர்களின் உரையாடல்களைத் தொடுத்து நயமாகப் புனைவதில் நல்லுருத்தினார் திறம், அம்ம மிகப் பெரிது. முல்லை நிலத்தார் காலினம் மேய்க்கும் குறும்பர்கள். பரந்த மேய்ச்சுத் தொழிலுக்கு ஏவலாட்களை அமர்த்திக் கொள்வார்கள். இந்தக் குறுந்தொழிலாளிகளைத் தலைமக்களாகக் கொண்டு பாடிய திணைச்சிறப்பும் இப்புலவர்க்கு உளது. ஆறு கலிகளில் இவர்தம் காதலையும்,பேச்சுக்களையும் ஐந்திணைத் தன்மை குன்றாவாறும், முல்லைச் சமுதாயத்திற்கு ஏற்பவும் பாடியுள்ளார் புலவர். "மோர் விற்றுச் செல்லும் சிறு நங்காய்,அன்றறொரு நாள் முல்லைக் காட்டின்கண் மாவடுவைப் பிளந்தாற்போன்ற நின் கண்விழியால் என் நெஞ்சத்தை அடிமையாகக் கொண்டுவிட்டாய்; என்னை மயக்கி என் உள்ளத்தைக்கொண்ட நீ ஒரு திருடி என்றான் ஆயத் தொழிலன்,

நின்னெஞ்சம் - -
களமாக்கொண்டு யாம் ஆள எமக்கெவன் எளிதாகும்
புனத்துளான் என்னைக்கும் புகாவுய்த்துக் கொடுப்பதோ
இனத்துளான் எந்தைக்குக் கலத்தொடு செல்வதோ

தினைக்காலுள் யாய்விட்ட கன்றுமேய்க் கிற்பதோ

உன் மனம் எனக்கு அடிமை யாவதால் என்ன பயன்! என் அண்ணனுக்குச் சோறுகொண்டு போய்க் கொடுக்குமோ? தந்தைக்குப் பால் கறக்கும் கலத்தினை எடுத்துக்கொண்டு போகுமா? தாய் மேயவிட்ட கன்றை மேய்த்துக் காத்து நிற்குமா? என்று நகையாடுகின்றாள் இளைய ஆய்ச்சி. “சிறிது நின்னோடு நெருங்கிப் பேச்சுக் கொடுத்தற்காக என்னை எளியள் என்று கருதிவிட்டாய். சும்மா மோர் தந்தவள் வெண்ணையும் தருவாள் என்பதுபோல எண்ணிவிட்டாய்” என்று ஊடலூட்டிப் பேசுகின்றாள் ஒர் ஆயமகள். - - -

காதலன் : அணிமிக்க அழகி, நீ விளையாடுதற்குச் சிற்றில் இழைத்துத் தருவேன்.

காதலி : பெற்றோர் கட்டிய வீட்டில் இருக்கும் உனக்கு வீடு கட்டத் தெரியுமா? தெரியாததைத் தெரியும் என்று சொல்லுதலால் நீ தெரிந்தது ஒன்றும் இல்லை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/352&oldid=1394810" இலிருந்து மீள்விக்கப்பட்டது