பக்கம்:தமிழ்க் காதல்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340

தமிழ்க் காதல்



காதலன் . வீடு கட்ட அறியேன் என்றாலும், நின் கூந்தலில் பூக்கட்ட அறிவேன். அதனைச் செய்யட்டுமா?

காதலி: வரைந்து என் கூந்தலில் பூ அணியும் துணிவும் முயற்சியும் உன்பால் இல்லை.தோழியர்கள் கொண்டு வந்த பூவைத் கொள்கின்றேன் என்று மடிந்திருக்கின்றாய். நீ மிகப் பேதை,

காதலன் : உன் கூந்தலைத் தொட மறுக்கின்றாய். நல்லது சுணங்கு படர்ந்த நின் முலை மேலாவது ஒவியம் ள்.ழுதலாமா? -

காதலி : அங்ங்னம் பிறர் எழுவதற்கு நாங்கள் உட்கார்ந்து இருப்போமோ? கூந்தலுக்கே மறுத்த நாங்கள் மார்பிற்கு இடங்கொடுப்போமோ? நீ ஒரு பித்தன் போலும்,

இத்தகைய இளங் காதலுரைகளை ஒத்த அன்பும் புணர்ச்சி யார்வமும் தோன்ற வழக்கு நடையிற் பாடுவர் நல்லுருத்திரர்.

“நின் முன்னின்று சொல்லாடுதல் கூடாது என்பது எம் சுற்றத்தார் கட்டளை என்று ஒரு நங்கை தெரிவித்ததும், மறுத்துக் கேட்கின்றான் ஒர் காதற் குறும்பன், "ஆம் சுற்றத்தார் கூறியது ஒக்கும், ஒக்கும். என்னொடு பேசலாகாது என்றார்களே யன்றிக் கூடலாகாது என்றார்களோ?" இது அன்பும் குறும்பும் கலந்த விடை என்பது வெளிப்படை

ஏறுகோள் கூறினும், முல்லை நிலத்தின் பிறபழக்கங்களைக் கூறினும், குற்றேவல் மாந்தர்களைத் தலைமக்களாகக் கூறினும், நளினச் சொல்லாட்டங்களைக் கூறினும், திணையிலக்கணம் பிறழாவாறு பாட வல்ல அகம்பெரும் புலவர் நல்லுருத்தினார் என்று அறிதல் வேண்டும். உள்ளப் புணர்ச்சி என்னும் ஒரு திருமணமே அகத்திணையின் குறிக்கோள். அயலவர்தம் மனப்பேச்சு அக்குறிக்கோளை அசைத்துப் பார்க்கும் பெருங்கருவி. தலைவனது வரைவு நீட்டிப்பு அன்ன பேச்சுக்கும் இடன் அளிக்கின்றது. ஆதலின் கற்பிற் சிறந்த களவுக் காதலி தமிழ்ச் சமுதாய மகளிரின் தூய வாழ்க்கைக் குறிக்கோளைத் தோழிக்கு நினைவூட்டுகின்றாள். நொதுமலர் வரவு தடுக்கப்பட வேண்டும் எனவும், தலைவன் விரைந்து வரைவு செய்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்து கின்றாள். இன்றேல் அறக்கேடும் உயிர்க்கேடும் நிகழும் என்பது அவளது குறிப்புரை. தலைவியின் குறிக்கோள் தமிழினத்தின் காதல் நெறி, புலவரின் அறிவுரை எல்லாம் பொதுளிய ஒரு முல்லைக் கலியாவது: : -

விரிநீர் உடுக்கை உலகம் பெறினும்
அருநெறி ஆயர் மகளிர்க்கு

இருமணம் கூடுதல் இல்லியல் பன்றே.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/353&oldid=1394811" இலிருந்து மீள்விக்கப்பட்டது