பக்கம்:தமிழ்க் காதல்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

341



26. பரணர்

பரந்த புகழ்கொண்ட சங்கச் சான்றோருள் ஒருவர் பரணர். இவரும் கபிலர்போல் புலவராற் பாடப் பெற்றவர். பரணர் கண்ட அகங்கள் 62. களவிற்கு உரியவை 33. கற்பிற்கு உரியவை 29. அகநானூற்றில் மட்டும் 34 செய்யுட்கள் உள.

வரலாற்றுள்ளம்

பரணர் வரலாற்று உள்ளம் மிக்கவர் என்பதனை முன்னரே குறித்துள்ளேன். அவர் யாத்த 52 அகப் பாடல்களுள் வரலாற்றுக் குறிப்பு உடையவை 51 என அறிக. அகநானூறு நெடும்பாட்டுக்கு அமைந்த தொகை நூல், பரணர்தம் 34 அகநானூற்றுச் செய்யுட்களில் 32 வரலாற்று ஒட்டம் உடையவை. ஆதலின் இவர் அகப்பாக்களை மேலோடாகப் படிப்பவர் கூட இலக்கியநெஞ்சத்தினும் வரலாற்று நெஞ்சம் வாய்ந்தவர் பரணர் என்று கண்டுகொள்வர். சங்க அகப்புலவோருள் இந்நெஞ்சு உடையோர் வேறு சிலர் இருந்தாலும் பரணரே முதலிடம் பெறுகின்றார் ஒரு க்ருத்துக்கு இயற்கைச் சூழ்நிலையைப் புலவன் அமைத்துக் காட்டுகின்றான். கருத்துக்கு நேர் தொடர்பின்றியும் புறம்பாகவும் இருப்பின், இயற்கை வண்ணம் என்பதற்காக அச்சூழ்நிலையை நாம் உடன்படுவதில்லை. பாட்டின் தலையாய பொருள்நோக்கி எல்லா அடிகளும் இயங்குதல் வேண்டும் அன்றோ? பரணரின் அகப்பா அமைப்புக்கள் உரிப்பொருளுக்குச் செவ்விய உறவில்லாதவை; பெண்ணின் உறுப்பு நலங்களுக்கு உவமைகளாகப் பழையனது போர், குட்டுவனது மாந்தை, வஞ்சி, அழிசியின் ஆர்க்காடு, விரானது இருப்பை என்ற ஊர்களை ஏழு பாடல்களிற் கூறுவர். ஊரை உவமிக்குங்கால், உடையானையும் அவனது சிறப்புக்களையும் மேலும் தொடுத்துச் சொல்லும்போது, கிளவித் தலைவனைக் காட்டிலும் ஊர்த் தலைவன் கற்பவர் மனத்தைக் கவர்ந்து விடுகின்றான். 、 。 •

வாரலெஞ் சேரி தாரல்நின் தாரே
அலரா கின்றாள் பெரும் காவிரிப்
பலராடு பெருந்துறை மருத்ொடு பிணித்த
ஏந்துகோட்டு யானைச் சேந்தன் தந்தை
அரியலம் புகவின் அங்கோட்டு வேட்டை
நிரைய ஒள்வாள் இளையர் பெருமகன்
அழிசி ஆர்க்காடு அன்னவிவள்

பழிதீர்மாணலம் தொலைவன கண்டே (குறுந் 258)

பரத்தைத் தலைவனுக்குத் தோழி வாயில் மறுக்கின்றாள். தலைவியின் பேரழகு அழிசி என்பவனது ஆர்க்காடு நக்ரம் போல்வது. அழிசி என்பவன் காவிரித்துறையில் வளர்ந்த மருத மரங்களில் う、2.3 、 - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/354&oldid=1394812" இலிருந்து மீள்விக்கப்பட்டது