பக்கம்:தமிழ்க் காதல்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342

தமிழ்க் காதல்


யானைகளைக் கட்டுபவன், சேந்தனுக்குத் தந்தை. வீரர்கள், உண்பவன், பெருவேட்டையாடி, பகைவர்க்கு நரகவாழ்வு தரும் வாளுடையன், வீரர்தலைவன் எனவாறு மேலும் பல செய்திகளை அழிசிக்கு அடுக்கிச் சொல்வர் பரணர். இக் குறுந்தொகையை அகத்திற்குப் பாடினாரா? அழிசிக்குப் பாடினாரா? என்று ஐயப்பட்டு அழிசிக்கு எனத் துணிகின்றோம்.

தலைவன் வரைவு நீட்டித்தலால் களவில் அலர் உண்டாகும் அவனது பரத்தைமையால் கற்பில் அலர் பரவும். ஊர்ப்பெண்டுகள் கூடிப்பேசும் அலரின் ஆரவாரத்துக்கு உவமை கூற வேண்டும். கூட, போர்க்களத்துச் சேர சோழப் படைகள் புறங்காட்டி ஒடியபோது பாண்டியனது மறவர்கள் ஆர்த்தார்களாம்; 2தித்தனொடு போராட எண்ணிய கட்டியும் பாணனும், அவனது உறந்தைக் கினைப் பறையைக் கேட்டளவில் அஞ்சி ஒடிய காலத்து ஆரவாரம் எழுந்ததாம், 3. வெண்ணிப் பறந்தலையில் கரிகால் வளவன் பிறவேந்தரையும் வேளிரையும் பொருது தொலைத்த ஞான்று அழுந்துாரார் பேராரவாரம் செய்தனராம், 4. ஒன்னாரை முறியடித்தபின் எவ்வியின் படையாளர்கள் உறத்துரில் கள்ளுண்டு கவ்வை எழுப்பினராம்; 5.'விச்சியர்கோன் வேந்தரொடு செய்த போரில், குறும்பூர் மக்கள் பெரிதும் முழங்கினாரம்: 6 வாகைப் போர்க் களத்தில் அதிகன் மாய்ந்த நிலையில் கொங்கர் வெற்றிக்குரல் செய்தனராம்; இவ்வாறு போர்க்கள ஆரவாரங்களை விரிவாக ...மொழிந்து, காதல் அலர்களுக்கு அவற்றை உவமை செய்குவர் பரணர். நன்னன், அன்னிமிஞிலி, ஆட்டனத்தி, ஆதிமந்தி, தழும்பன், ஆய், அகுதை, கோசர் முதலியோர் நிகழ்ச்சிகள், இவர்தம் அகச் செய்யுட்களில் வருவன.

செய்வினை மருங்கிற் சென்றோர் வல்வரின்
விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான்
வெருவரு தானையொடு வேண்டுபுலத் திறுத்த
பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்
குடா வாகைப் பறந்தலை ஆடுபெற
ஒன்பது குடையும் நன்பகல் ஒழித்த
பீடில் மன்னர் போல

ஒடுவை மன்னால் வாடை நீ எமக்கே (அகம். 125)

வாடைக்கு அழிந்த தலைவியின் துணிவுப்பாட்டு இது. கரிகாற் சோழனொடு போர் செய்வதற்கென்று ஒன்பது மன்னர்கள் வாகைச் களத்திற்குச் சென்று செருக்குற்றனர். படைவளம் உடைய சோழன் வருகின்றான் எனக் கேள்விப்பட்டதும், அவன் முன்னிற்க மாட்டாராய் ஒன்பது அரசர்களும் குடைகளைப் போட்டுவிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/355&oldid=1394813" இலிருந்து மீள்விக்கப்பட்டது