பக்கம்:தமிழ்க் காதல்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

343


ஒடிப்போயினர் காண். 'வாடையே தருக்குற்று என்னைக் கொடுமைப்படுத்தும் நீ தலைவன் விரைந்துவரின் ஒடவேண்டி வரும் தோற்று ஓடாது பெருமிதமாக இப்போதே ஒடி யொழிக’ என்று வாடைத் தோல்விக்கு, மன்னர் தோல்வியை உவமை ஆக்குகின்றாள் தலைவி.

மேற்காட்டியாங்கு வரலாற்றுச் செய்திகள் மிக வருதலின், பரணர்தம் அகப்பாட்டுக்கள் இயற்கை வளம் குறைந்து நிற்கின்றன. முதல் கருப்பொருள்கள் உரிப் பொருளுக்கு உணர்ச்சியூட்டும் வகையில் புனைவு பெறவில்லை. புறவரலாறு அகவிலக்கியத்திதைச் சிறப்பிக்காது எனவும், வரலாறு மடுத்த புலவன் அகப்புலவனாக ஒளிரான் எனவும், வரலாறோட்டம் இயல்பான எளிய கற்பனையோட்டத்தைக் குறுக்கும் எனவும் பரணரின் பாட்டாராய்ச்சியிலிருந்து தெரிந்து கொள்கின்றோம். இதனால் பரணர் பெருமகனின் பெரும்புலமைக்கு இழுக்காம் என்று நினையற்க. யாரினும் வரலாறு பாடவல்ல மொழிப் புலமையர் என்று பாராட்டுவோம். வரலாற்றுப் பாட்டும் இலக்கியப் பாட்டேயாம், பெயர் சுட்டா அகவிலக்கியத்திற்கு இயற்கை யுவமைகளும் இயற்கைச் சூழ்நிலைகளுமே சிறப்பளிக்கும் என்பது பலர் பாடல்களிற் கண்ட உண்மையாதலின், அதனை எதிர்மறை முகத்தானும் உணர்வதற்கு வரலாறு விஞ்சிய சிலர்தம் அகப்பாடல்கள் துணை செய்கின்றன என்று தெரிந்து கொள்வோமாக.

அரிய துறைகள்

அரிய புதிய துறைகளை மேற்கொண்டு பாடும் விழைவுடையர் பரணர் தலைமகன் தன் நெஞ்சிற்குக் கூறியது என்ற ஒரு துறையில், களவும் கற்பும்பட 17 செய்யுட்களை யாத்துளர் இரவுக்குறி வந்து நீங்கும்போது, அல்ல குறிப்பட்டு அயர்ந்து செல்லும்போதும், இற்செறிப்புக் கேட்டபோதும், வரைவு மறுக்கப்பட்ட போதும், இடைச்சுரத்தில் திரும்ப நினைக்கும் போதும், தலைவி மிக்க ஊடல் கொண்டபோதும், பரணரின் தலைவர்கள் நெஞ்சினை முன்னிலைப் படுத்திச் சொல்லாடுப. தலைவியின் பாங்காயினர் கேட்குமாறு பரத்தை கூற்றுக்கள் ஐந்து பாடலுக்குத் துறையாவன. ஊடல் மறுத்த தலைமகள் சொல்லியது என்பது ஒர் அரிய துறை நற். 260)புறத்திணைக்கண் மகட்பாற் காஞ்சித்துறையை எடுத்துக் கொண்டு ஆறு பாடல்கள் பாடியிருப்பரேல், அரிய பண்களை விளம்பும் இசைப்புலவர்போல் அரிய தமிழ்த்துறை பாடுவாபரணர் என்று பாராட்டலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/356&oldid=1394814" இலிருந்து மீள்விக்கப்பட்டது