பக்கம்:தமிழ்க் காதல்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

347


பேருண்மையைப் பரத்தை வாயிலாக வெளிப்படத்துவர் பரணர். பரத்தை அங்ங்னம் கூறலாம். தன் கணவன் பன்மைப்பரத்தனாயினும் இல்லாள் பொறுக்க வேண்டுமன்றோ? இல்லறம் நடத்துவதும் அவனை வரவேற்பதும் திருத்துவதும் அவளது கடன்கள் அல்லவா?

ஒலிபல் கூந்தல் நலம்பெறப் புனைந்த
முகையவிழ் கோழை வாட்டிய -

பகைவன் மன்யான் மறந்தமை கலனே (நற். 290)

“நட்பாகி என் கூந்தலுக்கு மலர்சூட்டிய அவனே இப்போது அம்மாலை வாடும்படி செய்கின்றான்; இளமை இன்பத்திற்குப் பகைவன் ஆயினான்; அவன் கைவிட்ட செயலை எப்படி மறப்பேன்’ என்று மிகக் கடுமையாக அறிவிக்கின்றாள் ஒரு நல்லாள் இத்தகைய கூற்றுக்களால் அன்பிலள் தலைவி என்று முடிவுகட்டுதல் கூடாது. அவளது உள்ளம் துரியது, பற்றுடையது.தன் தலைவனது பரத்தமைக்கு அவள் பேசுவது ஒக்கும் என்று கருத்துக் கொள்ளுக. எனினும் அன்பற்றவள் போன்ற எல்லைக்குச் சென்று அகத்தலைவி பேசும் வல்லுரைகள் இவை என்பதை மறைத்தற்கில்லை. இவ்வல்லுரைகளை நல்லுரைகளாகக் கொண்டு வணங்கி ஒடுங்கி நாணி ஊடிக்கூடி மகிழ்வான் கணவன் என்பது அகவிலக்கணம். . “பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே”(குறுந் 19) என்று தலைவன் யாது செய்வது என்று ஆற்றாது தன் நெஞ்சை நோக்கி இரங்கும்போது, அவன் கழிவிரக்கம் காணும் தலைவி பிணக்கு

பாற்கல்வி -

தலைவனது முதற்பரத்தமையைக் கேட்டு ஓர் இல்லிள நங்கை நிலத்திலே புரண்டு கூந்தல் புழுதிபடத் துடித்து அழுதாள். வீடுநோக்கி வந்த அத்தலைவனுக்குத் தோழி இனி என் செய்வது என்று வாயில் உடன்பட்டாள்.தலைவன் மேலும் தோழிக்குச் சினம்; தலைவி மேலும் அவளுக்குப் பெருஞ்சினம். இவளுக்கு அழகு இருந்தும் என் பயன்?பெருந்தோட்செல்வம் இருந்தும் என்ன பயன்? அழகு உண்டேயன்றி அவனைப் பிணிக்கும் அறிவில்லையே?

அணித்தகை யல்லது பிணித்தல் தேற்றாப் ,

பெருந்தோட் செல்வத் திவள் (நற். 270)

என்று தலைவியைச் சுட்டி இடித்துரைக்கின்றாள். எனவே, ஆடவனது பரத்தமைக்குக் காரணம் ஓரளவு மனைவி என்பதும், அவனது காமவளவினை அறிந்து அதற்கேற்ப ஒழுகாத இன்பக்குறைவு என்பதும் பரணர் கருத்தாக அறிகின்றோம்.“ஊரான் காமம் பெருமை அறியேன். நன்றும் உய்ந்தனென்வ்ாழி தோழி” (அகம். 236) தலைவன் பெருங் காமவுணர்வு உடையவன் என்பதைப் புரிந்துகொண்டேன்; அதற்கு ஏற்ப இன்பத்துறையில் ஒழுகலா னேன்; அவனைப் பரத்தமைக் குற்றம் சொல்வதிலிருந்து நல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/360&oldid=1394818" இலிருந்து மீள்விக்கப்பட்டது