பக்கம்:தமிழ்க் காதல்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348

தமிழ்க் காதல்


காலமாகப் பிழைத்தேன் என்று ஒரு தலைவி மெய்யறிவு பெற்றாள் : என்பதையும் பரணர் குறிப்பிடுவர்.

பரணரின் கற்புப்பாடல்கள் பெரும்பாலும் மருதத்திணையன; பரத்தைத் துறையன. இவ்வகை அகச்செய்யுட்களைக் கற்கும்போது, அவர் பாடிய புறச்செய்யுட்களில் இரண்டு நினைவிற்கு வருகின்றன. பேகன் தன் மனைவி கண்ணகியைக் கைவிட்டு நல்லூரில் பரத்தை வயப்பட்டிருந்தான். அவனை மீட்பதற்காகப் பாடிய புலவர் நால்வருள் பரணரும் ஒருவர். ஏனை மூவர் ஆளுக்கொரு பாடலே பாடினர்; பரணரோ இரு பாடல்கள் பாடி ஒழுங்கான இல்லறம் நடத்தும்படி பேகனை வேண்டினர் என்பதனையும் அறிக.

27. பாலை பாடிய பெருங்கடுங்கோ

பெருங்கடுங்கோ பாடிய அகங்கள் 67. அவற்றுள் 7 களவொழுக்கின, 60 கற்பொழுக்கின. களவு கற்புகளில் பிரிதலும், பிரிதல் நிமித்தமும் ஆகிய பாலையுணர்ச்சிகளை இரக்கமும் துணிவும் தோன்றப் பாடவல்ல தனித்திறம் உடையாராதலின் "பாலை பாடிய” என்ற சிறப்புத் தொடரை அடைந்தார் பெருங்கடுங்கோ. பாலைப்புலவர் ஒதலாந்தையார் களவியலை விரித்தும் பலதுறையாகவும் பலர் கூற்றாகவும் ஐங்குறுநூற்றில் பாடியிருப்ப, பெருங்கடுங்கோ பாலைக்கலியில் களவுத் துறைக்கு இடனளிக்கவில்லை. உடன்போக்கு சிறந்த களவுப் பாலையாகும். நற்றாயின் புலம்பல்களை அகத்துறையிற் கேட்கலாம். அவ்வுடன் போக்கினைத் தாய் கூற்றாகக் கொண்டு யாதும் பாடிற்றிலர். முக்கோற்பகவர் அறங்கூறும் களவுத்துறையில் (கலி. 8) தாய் உள்ளிடம் பெறுகின்றாள். 35 பாலைக்கலியில் களவுத்தினைப் பாட்டு இஃது ஒன்றேயாம்.பாலைக்கலியில் உடன்போக்குத்துறை இடம்பெறாவிட்டாலும், பிற தொகைகளிலும் இத்துறை பற்றிய பெருங்கடுங்கோவின் பாடல்கள் சில உள என்று அறிக.

உடன்போக்குத் துறை -

பாலைப் புலவன் களவில் உடன்போக்குத் துறையை மிகவும் . விரும்பிப் பாடுவான். பகற்குறி இரவுக்குறிகளில் எல்லாம் முன்பு தலைவன் தலைவியின் இடத்திற்குச் சென்றான். தலைவி பெற்றுப் பேணி வளர்த்த குடும்பத்தாரை இதுகாறும் பிரிந்தவள் அல்லள். உடன்போக்கிற்காகப் பிரிந்து வருகின்றாளாதலின்,தலைவன் இயல்பினும்பேரளி செய்வான், உள்ளத்திற் சோர்பு எழாதபடி மகிழ்ச்சி யூட்டுவான், வாயூறிப் பேசுவான். எனவே உடன்போக்குச் செய்யுட்களில் தலைவனது உள்ளப் புனைவுக்கு இலக்கிய வாய்ப்பு உண்டு. புலமை விளையாட்டிற்கு இடம் உண்டு.

தலைவியின் கூந்தலுக்குள் பாதிரி மலரைச் செருகிக் கூந்தல்மேல் மராமலரைச் சூட்டினான் தலைவன். “நின் வளையல் ஒலிக்கக் கைiசிச் சிறிது முன்னே நட; உன் பின்னழகைக் 壽

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/361&oldid=1394833" இலிருந்து மீள்விக்கப்பட்டது