பக்கம்:தமிழ்க் காதல்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

363


மனைவி. எங்கே சென்றிருந்தாய் என்று வினவிய தலைவிக்குக் குதிரை ஏறிவருகிறேன் என்றான் காமக் குதிரையை நிலா முற்றத்தில் ஒட்டி விளையாடினையோ? அக் குதிரை விளையாட்டு உன் அழகைக் கெடுக்கும் என்று ஊடினாள் தலைவி.

முத்தேர் முறுவலாய் நம்வலைப் பட்டதோர்

புத்தியானை வந்தது காண்பான்யான் தங்கினேன் (கவி. 97)

வலைக்குள்ளே ஒரு யானை அகப்பட்டுக் கொண்டது. அந்தப் புதிய யானையை வேடிக்கை பார்த்தேன் என்றான் கணவன். “ஆம் நானும் கேள்விப்பட்டேன். அந்த யானைக்கு நெற்றியிலே திலகம் உண்டு. தொய்யில் ஒவியம் வரைந்த மார்பு உண்டு. காதில் மகரக் குழை உண்டு. மணப் பொடி பூசி நறுங்கள்ளுண்டு எல்லாரையும் பிணித்தற்குக் கதவுக்குப் பக்கத்திலே சாய்ந்து நிற்பது உண்டு. மதம் மிகுந்து விடாதபடி அந்த யானையை அடக்கு’ என்று புலவி மொழிந்தாள் தலைவி. புனலாடினேன், அதனால் தாழ்த்தது என்று சொல்லிய தலைவனுக்கு,

ஒஒ, புனலாடினாய் எனவும் கேட்டேன் புனலாங்கே
நீனிர் தெறிகதுப்பு வாரும் அறலாக
மாணெழில் உண்கண் பிறழும் கயலாகக்
கார்மலர் வேய்ந்த கமழ்பூம் பரப்பாக
நாணுச் சிதையழித்து நன்பகல் வந்தஅள்

யானர்ப் புதுப்புனல் ஆடினாய் (கவி. 98)

நீ ஆடிய துறைக்குக் கருமணல் கூந்தலாகும்; மீன்கள் கண்களாகும்: அத்துறையில் நாணம் என்னும் கரையை உடைத்துக்கொண்டு ஒரு புதிய புனல் பகற் காலத்து ஓடி வரும் என்று அறிந்தேன் என்று நகைத்தாள் இல்லாள். எனவே அவன் சொல்லிய கடவுளையும் குதிரையையும் யானையையும் புனலையும் பலவகைப் பரத்தையர் எனக் கருத்துக் கொண்டு ஊடல் மிகுந்தாள். இக் கவிகளின் போக்கை ஆராயின், தலைவன் பரத்தன் அல்லன் என்பதும், பரத்தனாகக் கொண்டு ஊடற்கிளவி தொடுக்கின்றாள் தலைவி என்பது புலனாகும்.

இளநாகனாரின் திணைத் தலைவன் பரத்தனாயினும், நல்லனாயினும்,தலைவியின் ஊடலை மதிப்பவன், தன்னைப் பரத்தன் என்று அவள் பொய்படப் புனையும்போது, இது காதற் பாங்கு என்று உணர்ந்து ஊடல்மிகத் தானும் உளறிப் பேசுபவன். இம்மெய்யறிவு காதல் நம்பிகளுக்கு இன்றியமையாதது. காதலுலகம் ஒருவகைக் கனவுலகம். ஆண்டுப் பொய் மெய்யாகும், தாழ்வு உயர்வாகும், ஊடற்றுன்பம் இன்பமாகும்.

மனைவி உயர்வும் கிழவோன் பணிவும்

நினையுங் காலைப் புலவியுள் உரிய (தொல்; 1172;

என்பது புலவிக் கலையாதலின், காதற் போர்க்களத்து ஆடவன் அடிமையும் பெண்ணின் தலைமையும் இன்ப வெற்றியை அளிக்கின்றன. இன்ப மெய்ப் புணர்ச்சிக்கு ஆண் தன்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/376&oldid=1394861" இலிருந்து மீள்விக்கப்பட்டது