பக்கம்:தமிழ்க் காதல்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370

தமிழ்க் காதல்


முதலான சொற்களும் ஆளப்படுகின்றன. தமிழ்மொழிக்கண் காதற் சொல்லாட்சி பல்லாறாக இருப்பினும் அவற்றிடை ஒர் ஒற்றுமை, பண்பு உண்டு. உள்ளத்தோடு இயைந்த தொடர்டெல்லாம் காதல் எனப்படுகின்றது. எனவே காதல் உள்ளப் புணர்ச்சி,மனவிசைவு என்று பொருள் கொள்ளலாம். இப்பொருள் அகத்தினைத் தலைமக்களுக்கும் பொருந்தும், உள்ளப் புணர்ச்சி அகத்திணையின் தலையாய இலக்கண மாதலின் மேலும் ஒன்றை நினைமின் காதல் என்னும் தொழிற்சொல் பல அன்புறவுகளைக் குறித்தாலும், காதலன் காதலி என்ற சொற்கள் பாலுறவுடையவர்களையே குறிக்கும். பிறவுடையாரையும் அன்பர்களையும் நண்பர்களையும் எத்துணை உள்ளொற்றுமை இருப்பினும் காதலி காதலன் என்று - சொல்லும்போதும், அத்தொழிற்சொல் பாலுறவையே கட்டும். இதனால் காதற்சொல் உள்ளன்பை உணர்த்துவது எனவும், முதலாவதாகப் பாலுறவைக் காட்டிநிற்பது எனவும் அறியலாம்.

கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் நட்பினர். அதியமானும் ஒளவையாரும் நட்பினர். ஆணும் பெண்ணும் நட்புறுதல் போல ஆணும் பெண்ணும் மனம் ஒத்த நட்பாக இருக்கலாம்; உணர்ச்சி ஒன்றிய நண்பர்களாக இருக்கலாமே. இவ்வுறவு மானிடவுறவன்றிப் பாலுறவாகாது. பாலுறவு என்று சொல்லும்போது உள்ளப்புணர்ச்சிமேல் உடற் புணர்ச்சியைக் கருதுகின்றோம். பால் என்பது மெய்யுறு காமத்தைக் குறிக்கும் . ஆண்பால் பெண்பால் என்ற பிரிவு முதற்கண் மெய் வேற்றுமையால் எழுவதன்றோ? எனவே பாலுறவு என்பது அம்மெய்களின் முயக்கத்தையே உணர்த்தும்.

காமம் என்னும் சொல்லுக்கு மெய்யுணர்ச்சி என்பது பொருள். "மெய்யில் தீரா மேவரு காமம்" (அகம் 28) என்பர் கபிலர். இச்சொல் பண்டு நற்பொருளில் பயின்றது. பாலுறவைக் “காமக்கூட்டம்” (1037) என்றும், காதலனைக் 'காமக் கிழவன்' ' (1058) என்றும் கூறுவர் தொல்காப்பியர். திருக்குறள் மூன்றாவது இயல் காமத்துப்பால் என வழங்கப்பெறும். மலரினும் மெல்லியது காமம், காமம் கூடியார் பெற்ற பயன், காமத்துக் காழில் கனி, கள்ளினும் காமம் இனிது எனப் பல குறள்களில் காமச்சொல் பயின்று வருகின்றது. மன்மதனைக் காமக்கடவுள் என்று மொழிவர் இளங்கோ.

காமம் என்பது பருவவுணர்ச்சி, மெல்லிய உடலுணர்ச்சி. இவ்வுணர்ச்சி பெருகி வளருங் காலம் இளமை எனவும், குறைந்தது சிறுகுங்காலம் முதுமை எனவும் படும். ஆதலின் குறைவு தொடங்குவதற்கு முன்னுள்ள இளமையில், பாலின்பம் துய்ப்பதைக் கருத்திற்கொள்ள வேண்டும். தமிழ்த்திணை எனத்தகும் அகத்திணைக்கு வெறும் உள்ளக் காதலும் பொருளன்று, வெறும் மெய்க் காமமும் பொருளன்று. உள்ளம் இயைந்த உடலுறவும், உடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/383&oldid=1394895" இலிருந்து மீள்விக்கப்பட்டது