பக்கம்:தமிழ்க் காதல்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372

தமிழ்க் காதல்



அவனது நெஞ்சத்தன்பிறகு வஞ்சகம் கற்பிப்பது இல்லை. 'அறனில்லா அன்பிலி பெற்ற மகன்” (கலி. 89) என்று கடி வனவெல்லாம் உணர்ச்சிச் சொற்களேயன்றி உண்மைக் கருத்துக்கள் அல்ல. அகத்தின் எத்துறைப் பாட்டும் உள்ளப்புணர்ச்சி, மனவுறவு என்னும் அடிநிலத்திலிருந்து தோன்றுவது. அந்நிலத்திற் பிறவாப் பாட்டு அகப்பாட்டு இல்லை. ஆதலின் இருவர்தம் மனவொப்பு உண்டோ இன்றோ, நிறைவோ குறைவோ என்ற வகையால் அகப்பாட்டில் ஆராய்ச்சி இல்லை. காதலன்மேல் காதலிக்கும், காதலிமேல் காதலனுக்கும் ஐயந்தோன்றிவிடின்?. தோன்றல் ஆகாது, தோன்றும் எண்ணமே ஆகாது எனின், அதுபற்றி மேலும் சிந்தித்தலும், காரணம் தேடலும், மறைந்து காணலும், பிறர்பாற் சொல்லலும், பிறர் சொல்லக் கேட்டலும் ஆகுமா? காதலுலகில் ஐயப்பாதை சாவுப்பாதை, எண்ணம் என்னும் அடியை ஒருகால் ஐயவழியில் எடுத்து வைத்துவிட்டால், அவ்வழி நீளுமேயல்லது முடியாது. அவ்வழியில் நடப்பவர் ஒடுவார் திரிவார் உழல்புணர்ச்சி இமயமலையன்ன உயர்ந்த புணர்ச்சியாகவும் தமிழன்ன தூய புணர்ச்சியாகவும் இலங்குக.

அகத்திணை இலக்கியத்தைக் கற்கும் காதலர்க்கு நிறையான தல்லுனர்ச்சி தோன்றுமல்லது கயமைப் புல்லுணர்ச்சி தோன்றாது ஏன்? காதற்பொருளில் ஐயச் சிந்தனைகள் ஆண்டு நுழைவு பெறவில்லை. காப்பியம், புதினம், நாடகம் முதலான பிற இலக்கியங்கள் காதலர்க்கு மனவொப்பு வேண்டும் என்று முடித்தாலும், முடிப்பதற்குமுன், ஒருவர் மேல் மற்றொருவருக்கு எழுந்த ஐயப்பாடுகளை எல்லாம் அழகாக விரித்து விளக்கும். துணுக்கமாக ஐயங்களைக் காட்டிச் செல்லும், பலபட ஐயச்சார்புகளை அடுக்கிக் கொண்டுபோகும். சூழ்நிலையும் கரவும்கொண்டு அமைப்பது தான் இலக்கிய அமைப்பு என்று கூறுவர் திறனாய்வாளர். இலக்கிய மாந்தர்களை ஐயப்பாதையில் இழுத்துச் செல்லும் போது, அவற்றைக் கற்பவரும் அப்பாதையில் நெடும் பொழுது நடக்கின்றனர். அதனால் காதற்பள்ளியில் ஐயக் கல்வியும் பெறுகின்றார் என்பதுவே கருத்து. நெஞ்சம் விழைவோடு நீள நினைப்பது எது, அறிவு வேட்கையோடு மிகுதியும் கற்பது எது, அது வாழ்க்கையிற் பதிந்துவிடும். பிறவிலக்கியம் எல்லாம் வழுவமைதி யிலக்கியம். அகத்திணை ஒன்றுதான் வழாநிலை யிலக்கியம், இவ்விலக்கியத்தின் முடியும் தூயது; அம்முடிவினைக் கற்பிக்க மேற்கொண்ட நெறியும் தூயது. ஆதலின் காதல் ஞாலத்து நிறைநெஞ்சம் வேண்டும் மனித குலம் தமிழ் அகத்திணையைக் கற்கவேண்டும். அகத்திணைக் கல்வி சங்ககாலங்களில் நன்றாக முறையாகப் பரவியிருந்தமையின், தமிழ் மொழிக்கண் ஒழுக்க ஐயத்தினை வைத்து இலக்கியங்கள் எழவில்லை என்று அறிக. சிலப்பதிகார மணிமேகலைத் தமிழ்க் காப்பியங்கள் இதற்கு ஒர் சானறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/385&oldid=1394899" இலிருந்து மீள்விக்கப்பட்டது