பக்கம்:தமிழ்க் காதல்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக் கல்வி

379


பெருகுகின்றது. அத்திண்மைக்குக் கலக்கம் வரும்போது, காக்கவல்ல புத்தாண்மை எங்கிருந்தோ அவட்குத் தோன்றுகின்றது.பிறர் தன் கற்புக்கு இடையூறு செய்வரேல், சினங்கொண்டு மறத்தி ஆவாள். உயிரைப் பொருட்படுத்தாள். கற்புடைப் பெண்டிர்க்குப் புறப்பகை அடிக்கடி வருவதில்லை.அன்புடைய அகத் தலைவன் தன் பரத்தமை யொழுக்கத்தால் பகையாக நடக்கின்றான். இவனை என் செய்வது? ஆண்டுச் சினங்கொண்டு மறத்தியாகாது,நிகரற்ற பொறுமை கொண்டு அறத்தியாய்க் காதலியாய் அவன் இன்பத்துக்கு இசையும் ஒருத்தியாகின்றாள்.

கடைஇய நின்மார்பு தோயலம் என்னும்
இடையும் நிறையும் எளிதோநிற் கானின்
கடவுபு கைத்தாங்கா நெஞ்சென்னும் தம்மோடு

உடன்வாழ் பகையுடை யார்க்கு (கலி. 77)

இங்ங்னம் கணவனைக் காணுங்கால் கற்பு இரங்குகின்றது, பணிகின்றது, பண்படுகின்றது. கற்பிலாத கணவனைக்கண்டு வருந்துவது 'கற்புள்ளம்; அவனை எள்ளி இகழ்ந்து பரத்தமையை வளர்க்காது ஆரத்தழுவி இன்புறுவது கற்புள்ளம். இவ்வுள்ளம் உடைய பெண்ணே அகத்தலைமைக்கு ஏற்றவள். இல்லக்கிழத்தியின் பல்வகைப் பண்புகளை ஒருங்குகாட்டும் தொல்காப்பியர் எல்லாப் பெண்ணியலுக்கும் கற்பே தலைமைப்பண்பு என்பதனை முதலில் வைத்து எண்ணுவர்.

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கம்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஒம்பலும்

பிறவும் அன்ன கிழவோன் மாண்புகள் (தொள். 1097)

பாலியற் கல்வி

அகத்திணை ஓர் பாலிலக்கியம், பெயரில்லாதார் வாழ்க்கையிலிருந்து காமநுணுக்கங்களைக் கற்றுக்கொள்கின்றோம். காமம் பற்றிய ஆணுடல் பெண்ணுடலின் கூறுகளையும், இயற்கை செயற்கை திரிபு ஆகிய மனக்கூறுகளையும் கரவின்றிப்பட்டாங்குச் சொல்வது பாலிலக்கண நூல். அந்நூல் வாழ்வைத் தொடாது, அறிவைத் தொடாது.அதனைக் கற்பவர்,அறிவு நிலைபெறுவரன்றிக் காதலுக்கு இன்றியமையாத உணர்ச்சி நிலையைப் பெறார்; சமுதாயத்தோடு இசைந்த புணர்ச்சி நிலையை எண்ணார். அகத்திணை வாழ்க்கையிலக்கியம் ஆதலால், உலக நடைமுறைக்கு ஒப்பதாயும் பெயரில்லாதாரின் காதலியல்களைப் புலப்படுத் துவதால், கற்பவர்க்குத் தமது என்ற உணர்ச்சியை ஊட்டுவதாயும் அமைந்துள்ளது. உடல் நலத்திற்கென உடற்பயிற்சி இருவர் செய்கின்றனர் என வைத்துக்கொள்வோம். ஒருவன் பயிற்சிப் படங்களைப் பார்த்துக் பயில்கின்றான். மற்றொருவன் தன்முன் நின்று பயிற்சிசெய்யும் பயில்வானைப் பார்த்துப் பயில்கின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/392&oldid=1395796" இலிருந்து மீள்விக்கப்பட்டது