பக்கம்:தமிழ்க் காதல்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380

தமிழ்க் காதல்


இவ்விரு நிலைக்கும் பெரு வேறுபாடு இல்லையா? பின்னது சிறந்தது, முறையானது, கெடுதலற்றது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? பாலிலக்கண நூல் கற்றுக் காதலுலகிற் புகுவான் இன்ப மரபு அறியாதவனாய், சமையல் நூல் கற்றுச் சமைக்கப் புகுந்தாளைப் போல இடர்ப்பட்டுக் காமம் இழப்பான், பசி நீங்கான். அகத்தினை போன்ற் பாலிலக்கியம் நூல் கற்பவர் கற்கும்போதே காதற் பயிற்சி கைவரப் பெறுவர் அன்னை அருகிருந்து மகள் அடுப்புத் தொழில் பழகிக்கொள்வது போல,அன்புக்கேடும் ஆாவாரமும் இன்றிக் காதலுலகில் இனிது இயங்குபவர். ஆதலின், பருவம் உற்ற ஆண் பெண் அனைவர்க்கும்.அகத்திணைக் கல்வி இன்றியாமையாதது.அச் கல்வி காமப் பருவத் தொட்க்கத்தே கற்கத் தொடங்கவேண்டியது.

அகக்கல்வி கற்கும் நல்லிளைஞர் இளைஞயர் இன்றியமையாத உள்ளப் பண்பாவது கற்பு என்றும்,இன்றியமையாத உடல் விளையாவது காமம் என்றும் தெளிவாக விளங்கிக் கொள்வர், ஒருவர் காமத்தை ஏனையர் மதித்து ஒழுகுவர், காமநிறைவு மன்நிறைவாம் என்று இன்பச் செய்கையில் மீக்கொள்வர், ஞாலத்தைக் காதலுக்குப் பயன்கொண்டு. தம் காதலால் ஞாலத்தை வாழ்விப்பர்.

அகம் கற்ற இளைஞன் தன் இன்டமே பெரிதென எண்ண மாட்டான். தன் கயமலர்க் கண்ணியை இன்புறுத்திப் பெறும் இன்பத்தையே காமம் என்று எண்ணி, அதற்கேற்றபடி காதற் பள்ளியில் நடந்துகொள்வான். மனைவியின் ஊடலையும் ஊடற் காரணங்களையும், ஊடல் நீட்சிகளையும், ஊடல் சொற்களையும் இன்ப இகலாகக் கருதாது, இன்ப வாயிலாகக் கருதுவான், தன் புகழ்ப் பெருமையையும், அறிவுப் பெருமையையும், செல்வப் பெரு மையையும், பதவிப் பெருமையையும், பரிசுப் பெருமையையும் எண்ணிச் செம்மாக்காது, மெல்லியலாளின் காமப்பெருமையையும் ஏற்றுக் கொண்டு இரங்கி மொழிவான்.

அகம் கற்ற இளையாள் காமப்பெருக்கம் கருதி ஊடுவாளேயன்றி, குற்றம் உடைய தலைவனாயினும்,அவனை இடித்துரைப்பதற்கு, அதுதான் காலம் என்று பள்ளிக்கலவியில் ஊடற் புரையோடாள். இன்பக்கொடை அவளது நோக்கம் ஆவதன்றிச் சிறுமைசுட்டி அக்கொடை செய்தல் அவள் கற்புக்குச் சிறப்பளிக்காது. பெருந்தோள் ஆடவனது பணிவையும் வேண்டுதலையும் கிடப்பையும் கண்டு கர்முகன் என்றோ, சிறியவன் என்றோ கருதித் தருக்காது, கற்பின் வணக்கம் என்று பொருள்புரிந்து இன்ப அருள் செய்வாள்.

அகம் கற்ற குடும்பத்தார் தம் ஆண் பெண் மக்களின் பருவ வோட்டங்களை எளிதிற் புரிந்துகொள்வர். பருவக்கோளாறு என்று கருதி மயங்கி, அறிவற்ற அன்பினால் காதற்கோளாறும் கற்புக்கோளாறும் செய்யார்.

அகக்கல்வி பரவிய இனத்தார் காதல் வாழ்வுக்கு மாறான சமுதாயப் போக்குகளை வேரூன்றவிடார். கற்பிற்கு முரணான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/393&oldid=1395797" இலிருந்து மீள்விக்கப்பட்டது